2026 August 16, Sunday ⛅ கொழும்பு 27° ⛅ யாழ்ப்பாணம் 28° ⛅ கண்டி 24° 🌧️ மட்டக்களப்பு 30°
LIVE
கரைதுறைப்பற்று பிரதேச சபை உப தவிசாளர் உட்பட ஐவர் கைது!நிதி முறைகேடுகள் தொடர்பான தகவல்களை வழங்குமாறு பயனாளிகளுக்கு கோரிக்கை!யாழ்ப்பாண மாவட்ட இராணுவ கட்டளைத் தளபதியால் புதிய வீடு கையளிப்பு!நாடு முழுவதும் 96 பகுதிகள் அதிஅபாய டெங்கு வலயங்களாக அடையாளம்!அவுஸ்திரேலியாவை 9 விக்கெட்டுகளால் வீழ்த்தி பங்களாதேஷ் வரலாற்று வெற்றி!நாட்டின் பெரிய வெங்காயத் தேவையில் 50% உள்நாட்டில் உற்பத்தி செய்ய திட்டம்!கடுவெல வழியாக பயணிப்போருக்கு பொலிஸாரின் முக்கிய அறிவிப்பு!28 ஆண்டுகால சாதனையை முறியடித்த ஜேர்மனியின் ஜூலியன் வெபர்!

பருத்தித்துறை நகர சபையில் நிறைவேற்றப்பட்ட கண்டன தீர்மானம்

உள்ளூர்December 24, 2025 · 8 months முன்1
பருத்தித்துறை நகர சபையில் நிறைவேற்றப்பட்ட கண்டன தீர்மானம்

தையிட்டி விகாரைக்கு எதிர்ப்பு தெரிவித்து, போராட்டத்தில் ஈடுபட்ட வேலன் சுவாமி உள்ளிட்ட ஐவர் கைது செய்யப்பட்ட சம்பவத்திற்கு எதிராக பருத்தித்துறை நகர சபையில் கண்டன தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது.

பருத்தித்துறை நகர சபையின் மாதாந்த அமர்வு இன்றைய தினம் புதன்கிழமை நகர பிதா வின்சன் டீபோல் டக்ளஸ்போல் தலைமையில் நடைபெற்றது.

அதன் போது , கடந்த ஞாயிற்றுக்கிழமை தையிட்டி சட்டவிரோத விகாரையை அகற்ற கோரி அமைதி வழி போராட்டத்தில் ஈடுபட்டிருந்தவர்களில் வேலன் சுவாமி , வலி கிழக்கு பிரதேச சபை தவிசாளர் தியாகராசா நிரோஷ் , வலி வடக்கு பிரதேச சபை உறுப்பினர்களான , சாருஜன் , பிரபாகரன் மற்றும் பிறேம்ஸ்டன் ஆகியோர் பொலிஸாரினால் தாக்கப்பட்டு , கைது செய்யப்பட்டமைக்கு எதிராக கண்டன தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.