2026 August 16, Sunday ⛅ கொழும்பு 27° ⛅ யாழ்ப்பாணம் 28° ⛅ கண்டி 24° 🌧️ மட்டக்களப்பு 30°
LIVE
கரைதுறைப்பற்று பிரதேச சபை உப தவிசாளர் உட்பட ஐவர் கைது!நிதி முறைகேடுகள் தொடர்பான தகவல்களை வழங்குமாறு பயனாளிகளுக்கு கோரிக்கை!யாழ்ப்பாண மாவட்ட இராணுவ கட்டளைத் தளபதியால் புதிய வீடு கையளிப்பு!நாடு முழுவதும் 96 பகுதிகள் அதிஅபாய டெங்கு வலயங்களாக அடையாளம்!அவுஸ்திரேலியாவை 9 விக்கெட்டுகளால் வீழ்த்தி பங்களாதேஷ் வரலாற்று வெற்றி!நாட்டின் பெரிய வெங்காயத் தேவையில் 50% உள்நாட்டில் உற்பத்தி செய்ய திட்டம்!கடுவெல வழியாக பயணிப்போருக்கு பொலிஸாரின் முக்கிய அறிவிப்பு!28 ஆண்டுகால சாதனையை முறியடித்த ஜேர்மனியின் ஜூலியன் வெபர்!

கிழக்கில் பாதுகாப்பற்ற நிலையில் 5641 சிறார்கள் உள்ளனர்!

உள்ளூர்December 24, 2025 · 8 months முன்2
கிழக்கில் பாதுகாப்பற்ற நிலையில் 5641 சிறார்கள் உள்ளனர்!

திருகோணமலை மாவட்ட பொலிஸ் பிரிவுகளுக்கு உட்பட்ட பகுதிகளில் உள்ள சிறார்களுக்கான கற்றல் உபகரணங்கள் வழங்கும் நிகழ்வு நடைபெற்றது.

திருகோணமலை இந்து கலாச்சார மண்டபத்தில் இன்று (24)) பொலிஸ் சேவை வனிதா இயக்கத்தின் ஏற்பாட்டில் இடம்பெற்றது.

குறித்த நிகழ்வில் பொலிஸ் சேவை வனிதா இயக்கத்தின் தலைவர் அனுஷா வீரசூரிய, கிழக்கு மாகாண பிரதி பொலிஸ்மா அதிபர் வர்ண ஜயசுந்தர, திருகோணமலை மாவட்ட பிரதி பொலிஸ்மா அதிபர் எம் ஜீ எல் திசாநாயக்க மற்றும் பல பொலிஸ் அதிகாரிகள் பங்கேற்றிருந்தனர்

குறித்த நிகழ்வில் கருத்து தெரிவித்த கிழக்கு மாகாண பிரதி பொலிஸ்மா அதிபர், கிழக்கு மாகாண மட்டத்திலே சிறார்கள் மீதான வன்முறைகள் இவ்வருடத்தில் 40% குறைவடைந்திருப்பதாக தெரிவித்தார்.

அவர் மேலும் குறிப்பிடுகையில் கிழக்கு மாகாண மட்டத்தில் பாதுகாப்பற்ற சிறுவர்களாக அடையாளம் காணப்ட்ட சிறுவர்கள் தொடர்பில் தாம் தொடர்ச்சியான கண்காணிப்பில் இருப்பதாகவும், அது தொடர்பான பாதுகாப்பினை உறுதி செய்யக்கூடிய வகையிலான வேலைத்திட்டங்கள் தொடர்ச்சியாக முன்னெடுக்கப்பட்டு வருவதாகவும் அவர் இதன்போது குறிப்பிட்டிருந்தார்.