2026 August 16, Sunday ⛅ கொழும்பு 27° ⛅ யாழ்ப்பாணம் 28° ⛅ கண்டி 22° ⛅ மட்டக்களப்பு 29°
LIVE
கரைதுறைப்பற்று பிரதேச சபை உப தவிசாளர் உட்பட ஐவர் கைது!நிதி முறைகேடுகள் தொடர்பான தகவல்களை வழங்குமாறு பயனாளிகளுக்கு கோரிக்கை!யாழ்ப்பாண மாவட்ட இராணுவ கட்டளைத் தளபதியால் புதிய வீடு கையளிப்பு!நாடு முழுவதும் 96 பகுதிகள் அதிஅபாய டெங்கு வலயங்களாக அடையாளம்!அவுஸ்திரேலியாவை 9 விக்கெட்டுகளால் வீழ்த்தி பங்களாதேஷ் வரலாற்று வெற்றி!நாட்டின் பெரிய வெங்காயத் தேவையில் 50% உள்நாட்டில் உற்பத்தி செய்ய திட்டம்!கடுவெல வழியாக பயணிப்போருக்கு பொலிஸாரின் முக்கிய அறிவிப்பு!28 ஆண்டுகால சாதனையை முறியடித்த ஜேர்மனியின் ஜூலியன் வெபர்!

முல்லைத்தீவில் கடத்த தயாராக இருந்த 3 கோடி பெறுமதியான கஞ்சா மீட்பு

உள்ளூர்December 18, 2025 · 8 months முன்2
முல்லைத்தீவில் கடத்த தயாராக இருந்த 3 கோடி பெறுமதியான கஞ்சா மீட்பு

முல்லைத்தீவு பொலிஸ் பிரிவுக்குட்பட்ட சாலை கடற்கரை பகுதியில் கஞ்சா பொதி கடத்த தயாராக இருந்த நிலையில் முல்லைத்தீவு கடற்படையினர், விஷேட அதிரடிபடையினரால் 3 கோடி பொறுமதியான கஞ்சா கைப்பற்றப்பட்ட சம்பவம் நேற்று இடம்பெற்றுள்ளது.

குறித்த பகுதியில் கஞ்சா பொதி கடத்தப்பட இருப்பதாக முல்லைத்தீவு கடற்படைக்கு கிடைக்க பெற்ற இரகசிய தகவலையடுத்து, முல்லைத்தீவு விஷேட அதிரடிபடையினர் இணைந்து மேற்கொண்ட நடவடிக்கையில் சாலை கடற்கரை பகுதியில் மகேந்திரா கப் ரக வாகனத்தில் வைத்து 140 கிலோ 460 கிராம் கேரளா கஞ்சா கைப்பற்றப்பட்டுள்ளது.

சந்தேகநபர் தப்பியோடியுள்ளார் இந்நிலையில், குறித்த நபரை கைது செய்வதற்குரிய நடவடிக்கைகளை முல்லைத்தீவு பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.

கைப்பற்றப்பட்ட குறித்த கஞ்சா பொதி மற்றும் கப் ரக வாகனத்தையும் முல்லைத்தீவு பொலிஸ் நிலையத்தில் பாரப்படுத்தப்பட்டுள்ளது.

மேலதிக விசாரணைகளின் பின்னர் நீதிமன்றத்தில் முற்படுத்தப்படவுள்ளதாக பொலிஸார் மேலும் தெரிவித்தனர்.