2026 August 16, Sunday 🌧️ கொழும்பு 27° ⛅ யாழ்ப்பாணம் 28° ⛅ கண்டி 22° ⛅ மட்டக்களப்பு 28°
LIVE
கரைதுறைப்பற்று பிரதேச சபை உப தவிசாளர் உட்பட ஐவர் கைது!நிதி முறைகேடுகள் தொடர்பான தகவல்களை வழங்குமாறு பயனாளிகளுக்கு கோரிக்கை!யாழ்ப்பாண மாவட்ட இராணுவ கட்டளைத் தளபதியால் புதிய வீடு கையளிப்பு!நாடு முழுவதும் 96 பகுதிகள் அதிஅபாய டெங்கு வலயங்களாக அடையாளம்!அவுஸ்திரேலியாவை 9 விக்கெட்டுகளால் வீழ்த்தி பங்களாதேஷ் வரலாற்று வெற்றி!நாட்டின் பெரிய வெங்காயத் தேவையில் 50% உள்நாட்டில் உற்பத்தி செய்ய திட்டம்!கடுவெல வழியாக பயணிப்போருக்கு பொலிஸாரின் முக்கிய அறிவிப்பு!28 ஆண்டுகால சாதனையை முறியடித்த ஜேர்மனியின் ஜூலியன் வெபர்!

பேரிடர் நிவாரணம் : பாதிக்கப்பட்ட தொழிலதிபர்களுக்கு ரூ.200 000!

உள்ளூர்December 8, 2025 · 8 months முன்1
பேரிடர் நிவாரணம் : பாதிக்கப்பட்ட தொழிலதிபர்களுக்கு ரூ.200 000!

சமீபத்தில் நிலவிய மோசமான காலநிலையால் ஏற்பட்ட திடீர் அனர்த்த நிலைமையினால் பாதிக்கப்பட்ட தேசியப் பொருளாதாரத்தை உடனடியாக மீட்டெடுக்கும் வகையில், அரசாங்கம் விரைவான நிவாரணத் திட்டம் ஒன்றை அறிவித்துள்ளது.

இதன் கீழ், பேரிடரினால் சேதமடைந்த ஒவ்வொரு தொழிலையும் மீண்டும் ஆரம்பிப்பதற்கு ஏதுவாக, தலா ரூபாய் 200,000.00 நிதி உதவி வழங்கப்படவுள்ளது.

இந்த 2 இலட்சம் ரூபா நிதியுதவியை, கைத்தொழில் மற்றும் தொழில்முனைவோர் அபிவிருத்தி அமைச்சில் பதிவு செய்யப்பட்ட அத்துடன், அமைச்சின் கீழ் இயங்கும் நிறுவனங்களான ஏற்றுமதி அபிவிருத்தி சபை (EDB), கைத்தொழில் அபிவிருத்தி சபை (IDB), தேசிய தொழில்முனைவோர் அபிவிருத்தி அதிகாரசபை (NEDA) உள்ளிட்ட நிறுவனங்களில் பதிவு செய்யப்பட்ட, பேரிடரினால் பாதிக்கப்பட்ட அனைத்துத் தொழிலதிபர்களும் பெற்றுக்கொள்ள முடியும்.

கைத்தொழில் உரிமையாளர்கள் பின்வரும் இரண்டு வழிகளில் நிவாரணத்தைப் பெறுவதற்கு விண்ணப்பிக்கலாம்:

இணையதளம் மூலம்: www.industry.gov.lk என்ற இணையத்தளம் வழியாக நேரடியாக விண்ணப்பிக்கலாம்.

அதிகாரிகள் மூலம்: மாவட்டச் செயலகங்கள் மற்றும் பிரதேச செயலகங்களில் உள்ள தொழில்முனைவோர் அபிவிருத்தி அதிகாரிகள், சிறு வணிக அபிவிருத்தி அதிகாரிகள், ஏற்றுமதி அபிவிருத்தி அதிகாரிகள் மற்றும் உற்பத்தித் திறன் மேம்பாட்டு அதிகாரிகள் ஊடாக விண்ணப்பங்களைச் சமர்ப்பிக்கலாம்.

‘தித்வா’ சூறாவளியால் பாதிக்கப்பட்ட தொழில்கள் குறித்த தரவுகளை உடனடியாகப் பெற்றுக்கொள்ளும் நோக்கில் அமைச்சு ஒரு விசேட பொறிமுறையை அறிமுகப்படுத்தியுள்ளது.

இறுதித் திகதி: தரவுகளைச் சமர்ப்பிப்பதற்கான இறுதித் திகதி டிசம்பர் 16 ஆம் திகதி பி.ப. 2 மணி ஆகும்.

தரவு உள்ளீடு:

www.industry.gov.lk அல்லது

https://aid.floodsupport.org/business-impact

தொடர்புக்கு: தகவல்களை வழங்குவதற்கோ அல்லது உதவி பெறுவதற்கோ 0712666660 என்ற தொலைபேசி இலக்கத்தை அழைக்கலாம்.

அத்துடன், பிரதேச மற்றும் மாவட்டச் செயலகங்களில் உள்ள அமைச்சு அதிகாரிகளிடமிருந்தும் தேவையான உதவிகளைப் பெற்றுக்கொள்ளலாம் என்று கைத்தொழில் மற்றும் தொழில்முனைவோர் அபிவிருத்தி அமைச்சு தெரிவித்துள்ளது.