2026 August 16, Sunday ⛅ கொழும்பு 27° ⛅ யாழ்ப்பாணம் 28° ⛅ கண்டி 24° 🌧️ மட்டக்களப்பு 30°
LIVE
கரைதுறைப்பற்று பிரதேச சபை உப தவிசாளர் உட்பட ஐவர் கைது!நிதி முறைகேடுகள் தொடர்பான தகவல்களை வழங்குமாறு பயனாளிகளுக்கு கோரிக்கை!யாழ்ப்பாண மாவட்ட இராணுவ கட்டளைத் தளபதியால் புதிய வீடு கையளிப்பு!நாடு முழுவதும் 96 பகுதிகள் அதிஅபாய டெங்கு வலயங்களாக அடையாளம்!அவுஸ்திரேலியாவை 9 விக்கெட்டுகளால் வீழ்த்தி பங்களாதேஷ் வரலாற்று வெற்றி!நாட்டின் பெரிய வெங்காயத் தேவையில் 50% உள்நாட்டில் உற்பத்தி செய்ய திட்டம்!கடுவெல வழியாக பயணிப்போருக்கு பொலிஸாரின் முக்கிய அறிவிப்பு!28 ஆண்டுகால சாதனையை முறியடித்த ஜேர்மனியின் ஜூலியன் வெபர்!

கழிவுகளை அகற்ற 3 வாரம்!

உள்ளூர்December 5, 2025 · 8 months முன்2
கழிவுகளை அகற்ற 3 வாரம்!

மேல் மாகாண கழிவு முகாமைத்துவக் குழுக் கூட்டம் பிரதமர் அலுவலகத்தில் நேற்று (04) பிரதமர் ஹரிணி அமரசூரிய தலைமையில் நடைபெற்றது.

இதன்போது, அனர்த்த நிலைமை காரணமாக குவிந்துள்ள கழிவுகளை முறையான வகையில் அகற்றி, துப்புரவு பணிகளை 3 வாரங்களுக்குள் நிறைவு செய்ய வேண்டும் என பிரதமர் தெரிவித்தார்.

இத்திட்டத்தின் கீழ் சேரும் கழிவுகளை விரைவாக அகற்றுவதற்காக காணி அபிவிருத்தி கூட்டுத்தாபனத்திற்கு சொந்தமான கெரவலப்பிட்டியவில் உள்ள காணியிலிருந்து 5 ஏக்கர் நிலம் வழங்கப்பட்டுள்ளதால், அதற்கமைய தற்போது சேரும் கழிவுகளை எவ்வித சிக்கலுமின்றி அகற்ற முடியும் என குழு தீர்மானித்தது.

அக்காணியில் சேகரிக்கப்படும் கழிவுகளை முறையாக அகற்றுவதற்கும் அங்கு சம்பந்தப்பட்ட நிறுவனங்கள் இணக்கம் தெரிவித்துள்ளன.