2026 August 17, Monday 🌧️ கொழும்பு 26° ⛅ யாழ்ப்பாணம் 28° ⛅ கண்டி 24° ⛅ மட்டக்களப்பு 28°
LIVE
கரைதுறைப்பற்று பிரதேச சபை உப தவிசாளர் உட்பட ஐவர் கைது!நிதி முறைகேடுகள் தொடர்பான தகவல்களை வழங்குமாறு பயனாளிகளுக்கு கோரிக்கை!யாழ்ப்பாண மாவட்ட இராணுவ கட்டளைத் தளபதியால் புதிய வீடு கையளிப்பு!நாடு முழுவதும் 96 பகுதிகள் அதிஅபாய டெங்கு வலயங்களாக அடையாளம்!அவுஸ்திரேலியாவை 9 விக்கெட்டுகளால் வீழ்த்தி பங்களாதேஷ் வரலாற்று வெற்றி!நாட்டின் பெரிய வெங்காயத் தேவையில் 50% உள்நாட்டில் உற்பத்தி செய்ய திட்டம்!கடுவெல வழியாக பயணிப்போருக்கு பொலிஸாரின் முக்கிய அறிவிப்பு!28 ஆண்டுகால சாதனையை முறியடித்த ஜேர்மனியின் ஜூலியன் வெபர்!

ஜப்பானின் விசேட மருத்துவர்கள் குழு இலங்கைக்கு வந்தடைவு!

உள்ளூர்December 1, 2025 · 9 months முன்0
ஜப்பானின் விசேட மருத்துவர்கள் குழு இலங்கைக்கு வந்தடைவு!

இலங்கை எதிர்நோக்கும் தற்போதைய அனர்த்த நிலையை முன்னிட்டு, அவசர மருத்துவ சேவைகளை மதிப்பீடு செய்வதற்காக ஜப்பான் அரசாங்கத்தால் நியமிக்கப்பட்ட சிறப்பு மருத்துவர்கள் குழு இலங்கை நாட்டை வந்தடைந்தது.

ஜப்பானின் நரிட்டா விமான நிலையத்திலிருந்து ஸ்ரீலங்கன் ஏர்லைன்ஸ் யு.எல் – 455 விமானத்தில் பயணித்த இந்த குழு கட்டுநாயக்க சர்வதேச விமான நிலையத்தை நேற்று மாலை 7.00 மணியளவில் வந்தடைந்தது.

5 ஜப்பானிய சிறப்பு மருத்துவர்களுடன், ஜப்பான் அரசாங்கத்தின் தொடர்பு மற்றும் ஒருங்கிணைப்பு அதிகாரிகளும் இந்த குழுவில் இடம்பெற்றுள்ளனர்.

இவர்கள் இலங்கையில் தற்போது நிலவும் மருத்துவ வசதிகள், அவசர சிகிச்சை திறன், மருந்துகள் மற்றும் தேவையான உபகரணங்களின் பற்றாக்குறை உள்ளிட்ட முக்கிய துறைகளை விரிவாக ஆய்வு செய்ய உள்ளனர்.

இந்த ஆய்வு முடிவுகளின் அடிப்படையில், இலங்கைக்கு வழங்கப்பட வேண்டிய மருத்துவ உதவி, நவீன உபகரணங்கள் மற்றும் நிபுணத்துவ ஆதரவு தொடர்பான முழுமையான அறிக்கை ஜப்பான் சுகாதார அமைச்சகத்திற்கு சமர்ப்பிக்கப்படவுள்ளது.