2026 August 16, Sunday ⛅ கொழும்பு 28° ⛅ யாழ்ப்பாணம் 28° ⛅ கண்டி 25° ⛅ மட்டக்களப்பு 31°
LIVE
கரைதுறைப்பற்று பிரதேச சபை உப தவிசாளர் உட்பட ஐவர் கைது!நிதி முறைகேடுகள் தொடர்பான தகவல்களை வழங்குமாறு பயனாளிகளுக்கு கோரிக்கை!யாழ்ப்பாண மாவட்ட இராணுவ கட்டளைத் தளபதியால் புதிய வீடு கையளிப்பு!நாடு முழுவதும் 96 பகுதிகள் அதிஅபாய டெங்கு வலயங்களாக அடையாளம்!அவுஸ்திரேலியாவை 9 விக்கெட்டுகளால் வீழ்த்தி பங்களாதேஷ் வரலாற்று வெற்றி!நாட்டின் பெரிய வெங்காயத் தேவையில் 50% உள்நாட்டில் உற்பத்தி செய்ய திட்டம்!கடுவெல வழியாக பயணிப்போருக்கு பொலிஸாரின் முக்கிய அறிவிப்பு!28 ஆண்டுகால சாதனையை முறியடித்த ஜேர்மனியின் ஜூலியன் வெபர்!

ஜப்பான் இலங்கைக்கு அவசர உதவிகளை வழங்கத் தீர்மானம்!

உள்ளூர்November 30, 2025 · 9 months முன்1
ஜப்பான் இலங்கைக்கு அவசர உதவிகளை வழங்கத் தீர்மானம்!

சீரற்ற வானிலை காரணமாக இலங்கையில் ஏற்பட்டுள்ள அனர்த்தத்திற்குப் பதிலளிக்கும் வகையில், ஜப்பான் இலங்கைக்கு அவசர உதவிகளை வழங்கத் தீர்மானித்துள்ளது.

ஜப்பானிய சர்வதேச ஒத்துழைப்பு முகவர் நிலையம் ஊடாக, மதிப்பீட்டுக் குழுவொன்றை இலங்கைக்கு அனுப்ப ஜப்பானிய அரசாங்கம் முடிவு செய்துள்ளது.

இக்குழுவில் மருத்துவ அதிகாரிகளும் உள்ளடங்குவர். அவர்கள் நாட்டின் மருத்துவத் தேவைகளைக் கண்காணிப்பதுடன், ஜப்பானிய அனர்த்த நிவாரணக் குழுவொன்றை அனுப்புவதற்கான சாத்தியக்கூறுகளை ஒருங்கிணைப்பார்கள் எனவும் குறிப்பிடப்பட்டுள்ளது.

மேலும், பாதிக்கப்பட்ட மக்களுக்கு துஐஊயு நிறுவனத்தின் ஊடாக கூடாரங்கள் மற்றும் போர்வைகள் உள்ளிட்ட அவசர நிவாரணப் பொருட்களையும் வழங்க ஜப்பானிய அரசாங்கம் தீர்மானித்துள்ளது.