2026 August 16, Sunday ⛅ கொழும்பு 27° ⛅ யாழ்ப்பாணம் 28° ⛅ கண்டி 22° ⛅ மட்டக்களப்பு 29°
LIVE
கரைதுறைப்பற்று பிரதேச சபை உப தவிசாளர் உட்பட ஐவர் கைது!நிதி முறைகேடுகள் தொடர்பான தகவல்களை வழங்குமாறு பயனாளிகளுக்கு கோரிக்கை!யாழ்ப்பாண மாவட்ட இராணுவ கட்டளைத் தளபதியால் புதிய வீடு கையளிப்பு!நாடு முழுவதும் 96 பகுதிகள் அதிஅபாய டெங்கு வலயங்களாக அடையாளம்!அவுஸ்திரேலியாவை 9 விக்கெட்டுகளால் வீழ்த்தி பங்களாதேஷ் வரலாற்று வெற்றி!நாட்டின் பெரிய வெங்காயத் தேவையில் 50% உள்நாட்டில் உற்பத்தி செய்ய திட்டம்!கடுவெல வழியாக பயணிப்போருக்கு பொலிஸாரின் முக்கிய அறிவிப்பு!28 ஆண்டுகால சாதனையை முறியடித்த ஜேர்மனியின் ஜூலியன் வெபர்!

கால்வாயில் விழுந்த கார் : ஒரே குடும்பத்தைச் சேர்ந்த மூவர் பலி

உள்ளூர்November 27, 2025 · 9 months முன்1
கால்வாயில் விழுந்த கார் : ஒரே குடும்பத்தைச் சேர்ந்த மூவர் பலி

அம்பாறை – சாய்ந்தமருது பகுதியில் வெள்ள நீர் நிரம்பிய கால்வாயில் கார் ஒன்று கவிழ்ந்து விபத்துக்குள்ளானதில் ஒரே குடும்பத்தைச் சேர்ந்த மூவர் பரிதாபமாக உயிரிழந்துள்ளனர்.

இச்சம்பவம் அம்பாறை மாவட்டம், சாய்ந்தமருது பொலிஸ் பிரிவுக்குட்பட்ட கரைவாகுப்பற்று, பொலிவேரியன் குடியிருப்புப் பகுதியில் இன்று (27) முற்பகல் இடம்பெற்றுள்ளது.

விபத்து குறித்து தகவலறிந்ததும் அனர்த்த முகாமைத்துவ மத்திய நிலையத்தினர், சாய்ந்தமருது பிரதேச செயலக அனர்த்த முகாமைத்துவ செயற்படையணி மற்றும் பொலிஸார் இணைந்து உடனடியாக மீட்புப் பணிகளை முன்னெடுத்தனர். இதன்போது கால்வாயில் மூழ்கிய கார் மீட்கப்பட்டது.

காரில் பயணித்த ஒரே குடும்பத்தைச் சேர்ந்த ஆண், பெண் மற்றும் சிறுமி ஆகிய மூவரும் மீட்கப்பட்டு உடனடியாக கல்முனை அஸ்ரப் ஞாபகார்த்த வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டனர். எனினும், அங்கு சிகிச்சை பலனின்றி மூவரும் உயிரிழந்துள்ளனர்.

இச்சம்பவம் தொடர்பில் சாய்ந்தமருது பொலிஸார் மேலதிக விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர்.