2026 August 16, Sunday ⛅ கொழும்பு 28° ⛅ யாழ்ப்பாணம் 29° ⛅ கண்டி 27° ⛅ மட்டக்களப்பு 31°
LIVE
கரைதுறைப்பற்று பிரதேச சபை உப தவிசாளர் உட்பட ஐவர் கைது!நிதி முறைகேடுகள் தொடர்பான தகவல்களை வழங்குமாறு பயனாளிகளுக்கு கோரிக்கை!யாழ்ப்பாண மாவட்ட இராணுவ கட்டளைத் தளபதியால் புதிய வீடு கையளிப்பு!நாடு முழுவதும் 96 பகுதிகள் அதிஅபாய டெங்கு வலயங்களாக அடையாளம்!அவுஸ்திரேலியாவை 9 விக்கெட்டுகளால் வீழ்த்தி பங்களாதேஷ் வரலாற்று வெற்றி!நாட்டின் பெரிய வெங்காயத் தேவையில் 50% உள்நாட்டில் உற்பத்தி செய்ய திட்டம்!கடுவெல வழியாக பயணிப்போருக்கு பொலிஸாரின் முக்கிய அறிவிப்பு!28 ஆண்டுகால சாதனையை முறியடித்த ஜேர்மனியின் ஜூலியன் வெபர்!

நிலவும் சிரற்ற காலநிலையால் 31 பேர் பலி!

உள்ளூர்November 27, 2025 · 9 months முன்1
நிலவும் சிரற்ற காலநிலையால் 31 பேர் பலி!

2025 நவம்பர் 17 முதல் 27 வரை இலங்கையில் ஏற்பட்ட சீரற்ற வானிலை காரணமாக ஏற்பட்ட பல்வேறு பேரிடர் சூழ்நிலைகளில் மொத்தம் 31 பேர் உயிரிழந்துள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

அனர்த்த முகாமைத்துவ மத்திய நிலையத்தின் கூற்றுப்படி, இந்த காலகட்டத்தில் 14 பேர் காணாமல் போயுள்ளதாகவும், 10 பேர் காயமடைந்துள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

நிலவும் சீரற்ற வானிலை காரணமாக 17 மாவட்டங்களில் 1,158 குடும்பங்களைச் சேர்ந்த மொத்தம் 4,008 பேர் கடுமையாகப் பாதிக்கப்பட்டுள்ளனர்.

41 குடும்பங்களைச் சேர்ந்த 131 நபர்கள் தற்போது 05 தற்காலிக தங்குமிடங்களில் தங்க வைக்கப்பட்டுள்ளதாக அனர்த்த முகாமைத்துவ மையம் தெரிவித்துள்ளது. அதே நேரத்தில் 136 குடும்பங்களைச் சேர்ந்த 472 பேர் அவர்களது உறவினர்களின் வீடுகளுக்கு மாற்றப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.