703 மில்லியன் ரூபாவுக்கும் அதிக மதிப்புள்ள போதைப்பொருள் மீட்பு!

இலங்கைக் கடலோரப் பொலிஸ் படையினர் 703 மில்லியன் ரூபாவுக்கும் அதிக மதிப்புள்ள போதைப்பொருளைப் பறிமுதல் செய்துள்ளனர்.
இலங்கைக் கடலோரக் பொலிஸ் படை, பேலியகொட குற்றப் பிரிவினருடன் இணைந்து, பெந்தர கடல் பகுதியில் நேற்று மேற்கொண்ட விசேட தேடுதல் நடவடிக்கையில் 43 கிலோகிராம் மற்றும் 968 கிராம் மெத்தம்பேட்டமைனைக் கைப்பற்றியுள்ளது.
பொலிஸாருக்குக் கிடைத்த இரகசியத் தகவலின் அடிப்படையில், கடலோர ரோந்துப் படகுகளை அனுப்பிய இலங்கைக் கடலோரக் பொலிஸ் படையினரால் இந்த நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது.
கைப்பற்றப்பட்ட போதைப்பொருள் மேலதிக விசாரணை மற்றும் சட்ட நடவடிக்கைகளுக்காக பேலியகொட குற்றப் பிரிவுப் பொலிஸாரிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளது.




