2026 August 16, Sunday ⛅ கொழும்பு 29° ⛅ யாழ்ப்பாணம் 30° 🌧️ கண்டி 28° ⛅ மட்டக்களப்பு 33°
LIVE
அவுஸ்திரேலியாவை 9 விக்கெட்டுகளால் வீழ்த்தி பங்களாதேஷ் வரலாற்று வெற்றி!நாட்டின் பெரிய வெங்காயத் தேவையில் 50% உள்நாட்டில் உற்பத்தி செய்ய திட்டம்!கடுவெல வழியாக பயணிப்போருக்கு பொலிஸாரின் முக்கிய அறிவிப்பு!28 ஆண்டுகால சாதனையை முறியடித்த ஜேர்மனியின் ஜூலியன் வெபர்!நாட்டின் பல பகுதிகளில் இன்று பல தடவைகள் மழைக்கு வாய்ப்பு!எல்ல சுற்றுலாத்துறைக்கு ரூ.1,000 மில்லியனுக்கும் அதிகமான அபிவிருத்தித் திட்டங்கள்!அம்பாறை மீனவர்களின் பிரச்சினைகளுக்கு விரைவான தீர்வு!ஜனாதிபதியுடனான கலந்துரையாடலின் முழு வீடியோவை கோரும் சட்டத்தரணிகள் சங்கம்!

மதுபோதையில் கடமையில் ஈடுபட்டிருந்த ரயில் கடவை பாதுகாப்பு ஊழியர் கைது

உள்ளூர்November 14, 2025 · 9 months முன்1
மதுபோதையில் கடமையில் ஈடுபட்டிருந்த ரயில் கடவை பாதுகாப்பு ஊழியர் கைது

மதுபோதையில் கடமையில் ஈடுபட்டிருந்த ரயில் கடவை பாதுகாப்பு ஊழியர் ஒருவர் ரயில்வே திணைக்கள பாதுகாப்பு அதிகாரிகளால் நேற்று இரவு கைதுசெய்யப்பட்டுள்ளார்.

ரயில்வே திணைக்கள பாதுகாப்பு அதிகாரிகளுக்கு கிடைத்த தகவலின் பேரில் சந்தேகநபர் கொள்ளுப்பிட்டி – உத்தராகன்த பகுதியில் உள்ள ரயில் கடவைக்கு அருகில் வைத்து கைது செய்யப்பட்டுள்ளார்.

கைதுசெய்யப்பட்டவர் கொழும்பு கொம்பனி வீதி ரயில் நிலையத்தில் கடமையாற்றும் ஊழியர் ஆவார்.

இது தொடர்பில் ரயில்வே திணைக்கள பாதுகாப்பு அதிகாரிகள் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.