2026 August 17, Monday 🌧️ கொழும்பு 25° ⛅ யாழ்ப்பாணம் 28° ⛅ கண்டி 21° ⛅ மட்டக்களப்பு 28°
LIVE
கரைதுறைப்பற்று பிரதேச சபை உப தவிசாளர் உட்பட ஐவர் கைது!நிதி முறைகேடுகள் தொடர்பான தகவல்களை வழங்குமாறு பயனாளிகளுக்கு கோரிக்கை!யாழ்ப்பாண மாவட்ட இராணுவ கட்டளைத் தளபதியால் புதிய வீடு கையளிப்பு!நாடு முழுவதும் 96 பகுதிகள் அதிஅபாய டெங்கு வலயங்களாக அடையாளம்!அவுஸ்திரேலியாவை 9 விக்கெட்டுகளால் வீழ்த்தி பங்களாதேஷ் வரலாற்று வெற்றி!நாட்டின் பெரிய வெங்காயத் தேவையில் 50% உள்நாட்டில் உற்பத்தி செய்ய திட்டம்!கடுவெல வழியாக பயணிப்போருக்கு பொலிஸாரின் முக்கிய அறிவிப்பு!28 ஆண்டுகால சாதனையை முறியடித்த ஜேர்மனியின் ஜூலியன் வெபர்!

குரங்குகளின் தொல்லைக்கு தீர்வு கோரும் அம்பகமுவ மக்கள்!

உள்ளூர்November 13, 2025 · 9 months முன்2
குரங்குகளின் தொல்லைக்கு தீர்வு கோரும் அம்பகமுவ மக்கள்!

அம்பகமுவ பிரதேச செயலகப் பிரிவில் உள்ள பல கிராமங்களின் மக்கள் குரங்குகளின் தொல்லை காரணமாக பல இன்னல்களை எதிர்கொண்டு வருகின்றனர்.

அம்பகமுவ பிரதேச செயலகப் பிரிவில் உள்ள கினிகத்தேன, அம்பதலாவ, அடெர்டின், ஹட்லஹா, அம்பகமுவ, பலந்தோட்ட, பெரகஹமுல மற்றும் ஹொரகட ஆகிய கிராமங்களில் குரங்குகளின் அச்சுறுத்தல் மிக மோசமான நிலையை எட்டியுள்ளது.

இது குறித்து கருத்து தெரிவித்த அந்தக் கிராமங்களின் கிராம மக்கள், தங்கள் கிராமங்களில் சுற்றித் திரியும் குரங்குகள் தற்போது தங்கள் விளைநிலங்கள் மற்றும் வீடுகளுக்குள் நுழைந்து, அங்கு சமைக்கப்பட்ட பொருட்களையும், வீடுகளின் கதவுகள் மற்றும் ஜன்னல்களின் திரைச்சீலைகளையும் அழித்து வருவதாகக் கூறுகின்றனர்.

குரங்குகளால் தாங்கள் எதிர்கொண்ட சிரமங்கள் குறித்து அதிகாரிகள் கவனம் செலுத்தி, இந்தக் குரங்குளை தங்கள் கிராமங்களிலிருந்து அகற்ற உரிய நடவடிக்கைகளை எடுக்குமாறு அந்தக் கிராமங்களின் மக்கள் கோரிக்கை விடுக்கின்றனர்.