2026 August 17, Monday 🌧️ கொழும்பு 25° ⛅ யாழ்ப்பாணம் 28° ⛅ கண்டி 22° ⛅ மட்டக்களப்பு 28°
LIVE
கரைதுறைப்பற்று பிரதேச சபை உப தவிசாளர் உட்பட ஐவர் கைது!நிதி முறைகேடுகள் தொடர்பான தகவல்களை வழங்குமாறு பயனாளிகளுக்கு கோரிக்கை!யாழ்ப்பாண மாவட்ட இராணுவ கட்டளைத் தளபதியால் புதிய வீடு கையளிப்பு!நாடு முழுவதும் 96 பகுதிகள் அதிஅபாய டெங்கு வலயங்களாக அடையாளம்!அவுஸ்திரேலியாவை 9 விக்கெட்டுகளால் வீழ்த்தி பங்களாதேஷ் வரலாற்று வெற்றி!நாட்டின் பெரிய வெங்காயத் தேவையில் 50% உள்நாட்டில் உற்பத்தி செய்ய திட்டம்!கடுவெல வழியாக பயணிப்போருக்கு பொலிஸாரின் முக்கிய அறிவிப்பு!28 ஆண்டுகால சாதனையை முறியடித்த ஜேர்மனியின் ஜூலியன் வெபர்!

யாழில் போதைப்பொருள் மாத்திரைகளுடன் இருவர் கைது

உள்ளூர்November 3, 2025 · 10 months முன்0
யாழில் போதைப்பொருள் மாத்திரைகளுடன் இருவர் கைது

யாழ்ப்பாணம் நகரில் இளைஞர்களை இலக்கு வைத்து போதைப்பொருள் மாத்திரைகளை விற்பனை செய்யும் கும்பலைச் சேர்ந்த இருவர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

இன்று சந்தேகநபர்களிடம் இருந்து 3200 போதை மாத்திரைகள் பொலிஸாரால் மீட்கப்பட்டன.

யாழ்ப்பாண மாவட்ட குற்றத்தடுப்பு பிரிவு பொலிஸாருக்கு கிடைத்த இரகசிய தகவலுக்கமைய கஸ்துரியார் வீதியில் மோட்டார் சைக்கிளில் சந்தேகத்திற்கு இடமான முறையில் பயணித்தவர்களை சோதனையிட்டபோதே குறித்த நபர்கள் போதை மாத்திரைகள் வைத்திருந்தமை கண்டுபிடிக்கப்பட்டது.

இதன்போது ஐந்து சந்தி பகுதி அருகில் வசிக்கும் 21 வயது மதிக்கத்தக்க இரண்டு இளைஞர்களே இவ்வாறு கைது செய்யப்பட்டனர்.

போதைப்பொருள் தொடர்பாக பொலிஸாரின் கைது நடவடிக்கை தீவிரமடைந்துள்ள நிலையில் அதற்கான தட்டுப்பாடு காரணமாக சந்தேகநபர்கள் பத்து போதை மாத்திரைகள் அடங்கிய அட்டையை 3000 ரூபா வரை விற்பனை செய்துள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

மேலதிக விசாரணைகளுக்கு பின்னர் சந்தேகநபர்களை யாழ்ப்பாணம் நீதிவான் நீதிமன்றத்தில் முற்படுத்த பொலிஸார் நடவடிக்கை எடுத்துள்ளனர்.