2026 September 21, Monday 🌧️ கொழும்பு 27° ⛅ யாழ்ப்பாணம் 29° ⛅ கண்டி 22° ⛅ மட்டக்களப்பு 29°
LIVE
SLMC தேசியப் பட்டியல்: ஹபீப் ரிபான் பெயர் அதிகாரப்பூர்வமாக அறிவிப்பு!ஜூலையின் 7.2% இலிருந்து ஆகஸ்டில் 8.1% ஆக பணவீக்கம் அதிகரிப்புஅனோஜன் குடும்பத்துக்கு சஜித் உறுதி – விடுதலைக்காக தொடரும் முயற்சிவிமல் வீரவன்ச நீதிமன்றில் ஆஜர் – பிடியாணையை திரும்பப் பெற கோரிக்கை!உச்ச நீதிமன்றத் தீர்ப்புக்குப் பின் ஜனாதிபதி மன்னிப்பை நாடும் ஞானசார தேரர்!தெற்கு அதிவேக நெடுஞ்சாலையில் பாரிய விபத்து – 10க்கும் மேற்பட்டோர் காயம்!மின்னல் மற்றும் பலத்த காற்று – மக்கள் முன்னெச்சரிக்கையுடன் இருக்க அறிவுறுத்தல்!உலகச் சந்தையில் எண்ணெய் விலை உயர்ந்தாலும் மானியத்தில் கட்டுப்படுத்துவோம் – ஜனாதிபதி!

முச்சக்கர வண்டி கட்டணம் குறையாது

உள்ளூர்November 1, 2025 · 11 months முன்1
முச்சக்கர வண்டி கட்டணம்  குறையாது

எரிபொருள் விலைச் திருத்தம் செய்யப்பட்டிருந்தாலும், முறையான ஒழுங்குமுறை இல்லாத காரணத்தினால் முச்சக்கர வண்டிகளுக்கான கட்டணங்களில் எந்தத் திருத்தமும் மேற்கொள்ளப்படாது என அகில இலங்கை முச்சக்கர வண்டி உரிமையாளர்கள் சங்கம் தெரிவித்துள்ளது. 

சங்கத்தின் தலைவர் லலித் தர்மசேகர கருத்துத் தெரிவிக்கையில், லங்கா பெற்றோலிய கூட்டுத்தாபனம் ஒக்டேன் 92 பெற்றோல் ஒரு லீற்றரின் விலையை 5 ரூபாவால் குறைத்திருந்தாலும், அதன் பயன் நுகர்வோருக்குச் சென்றடையாது என்று குறிப்பிட்டார். 

மாதாந்த எரிபொருள் விலை சூத்திரத்திற்கமைய நேற்று நள்ளிரவு முதல் அமுலாகும் வகையில் ஒக்டேன் 92 பெற்றோல் ஒரு லீற்றரின் விலை 5 ரூபாவால் குறைக்கப்பட்டது. இதன்படி, 299 ரூபாவாக இருந்த ஒக்டேன் 92 பெற்றோலின் புதிய விலை 294 ரூபாவாகும். 

எவ்வாறாயினும், ஏனைய எரிபொருள் வகைகளின் விலைகளில் எவ்வித மாற்றமும் இல்லை என லங்கா பெற்றோலிய கூட்டுத்தாபனம் மேலும் தெரிவித்துள்ளது.