சூறாவளியாக தீவிரமடையும் மோந்தா புயல்.

வங்கக்கடலில் நிலைகொண்டிருந்த ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம் இன்று அதிகாலை 2.30 மணியளவில் புயலாக வலுப்பெற்றது.
மோந்தா என்ற இந்த புயல் நாளை (28) காலை சூறாவளியாக வலுப்பெற்று, மாலையில் ஆந்திரப் பிரதேச கரையைக் கடக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
இதன் காரணமாக இந்தியா தமிழ்நாட்டில் இன்று பலத்த மழை பெய்யக்கூடும் என இந்திய ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.




