நாட்டின் இன்றைய வானிலை!

நாட்டின் இன்று பெரும்பாலான பகுதிகளில் பிற்பகல் 1.00 மணிக்குப் பிறகு இடியுடன் கூடிய மழை பெய்யக்கூடும் என வளிமண்டலவியல் திணைக்களம் அறிவித்துள்ளது.
அதற்கமைய, மேல், சப்ரகமுவ, மத்திய, ஊவா, வடமத்திய மற்றும் வடமேல் மாகாணங்களின் சில இடங்களில் 75 மி.மீட்டருக்கும் அதிகமான ஓரளவு பலத்த மழை பெய்யக்கூடும் எனவும் தென் மாகாணங்களில் காலை வேளைகளில்அந்த திணைக்களம் வௌியிட்டுள்ள வானிலை முன்னறிவிப்பில் குறிப்பிடப்பட்டுள்ளது.
மேலும், இடியுடன் கூடிய மழையுடன் ஏற்படக்கூடிய வேலைகளில் தற்காலிகமாக பலத்த காற்று மற்றும் மின்னல் தாக்கத்தினால் ஏற்படும் ஆபத்துகளைக் குறைப்பதற்குத் தேவையான நடவடிக்கைகளை எடுக்குமாறு வளிமண்டலவியல் திணைக்களம் பொதுமக்களிடம் கேட்டுக்கொண்டுள்ளது.




