2026 August 16, Sunday ⛅ கொழும்பு 29° ⛅ யாழ்ப்பாணம் 30° 🌧️ கண்டி 28° ⛅ மட்டக்களப்பு 33°
LIVE
அவுஸ்திரேலியாவை 9 விக்கெட்டுகளால் வீழ்த்தி பங்களாதேஷ் வரலாற்று வெற்றி!நாட்டின் பெரிய வெங்காயத் தேவையில் 50% உள்நாட்டில் உற்பத்தி செய்ய திட்டம்!கடுவெல வழியாக பயணிப்போருக்கு பொலிஸாரின் முக்கிய அறிவிப்பு!28 ஆண்டுகால சாதனையை முறியடித்த ஜேர்மனியின் ஜூலியன் வெபர்!நாட்டின் பல பகுதிகளில் இன்று பல தடவைகள் மழைக்கு வாய்ப்பு!எல்ல சுற்றுலாத்துறைக்கு ரூ.1,000 மில்லியனுக்கும் அதிகமான அபிவிருத்தித் திட்டங்கள்!அம்பாறை மீனவர்களின் பிரச்சினைகளுக்கு விரைவான தீர்வு!ஜனாதிபதியுடனான கலந்துரையாடலின் முழு வீடியோவை கோரும் சட்டத்தரணிகள் சங்கம்!

இந்திய உயர்ஸ்தானிகர் – டில்வின் சில்வா சந்திப்பு !

உள்ளூர்October 14, 2025 · 10 months முன்2
இந்திய உயர்ஸ்தானிகர் –  டில்வின் சில்வா சந்திப்பு !

இந்திய உயர்ஸ்தானிகர் சந்தோஸ் ஜா அவர்களுக்கும் மக்கள் விடுதலை முன்னணியின் பொதுச் செயலாளர் டில்வின் சில்வா அவர்களுக்கும் இடையிலான சுமூகமான கலந்துரையாடல் நேற்று (13) பிற்பகல் மக்கள் விடுதலை முன்னணியின் தலைமை அலுவலகத்தில் இடம்பெற்றது. இச்சந்திப்பில் இந்திய உயர்ஸ்தானிகர் அலுவலகத்தை பிரதிநிதித்துவம் செய்து நவ்யா சிங்லா அவர்களும் இணைந்து கொண்டிருந்தார்.

இதன்போது, நாட்டின் நிகழ்கால நிலைமைகள் தொடர்பாக கலந்துரையாடப்பட்டதுடன், இந்திய உயர்ஸ்தானிகர் கலந்துகொண்ட வீடுகளற்ற மலையக மக்களுக்கு வீட்டுரிமைகளை பெற்றுக்கொடுக்கும் வேலைத்திட்டத்தின் வெற்றி குறித்தும் கலந்துரையாடப்பட்டது. எதிர்காலத்தில் இவற்றுடன் சம்பந்தப்பட்ட உதவிகளை வழங்குவதாகவும் இந்திய உயர்ஸ்தானிகர் தெரிவித்திருந்தார். இந்த வீடுகளை வழங்கும் கருத்திட்டத்திற்கு இந்தியா வழங்கிய ஒத்துழைப்புக்கு டில்வின் சில்வா இந்திய அரசாங்கத்திற்கும் இந்திய மக்களுக்கும் நன்றிகளை தெரிவித்துக் கொண்டார்.

மேலும், எதிர்வரும் காலத்தில் இந்திய முதலீடுகள் மற்றும் நன்கொடைகளை பெற்றுக்கொள்ளுதல் தொடர்பாகவும் கலந்துரையாடப்பட்டதுடன், விவசாயம், தகவல் தொழில்நுட்பம், கடல் தொழிற்றுறை ஆகிய துறைகளில் இந்தியா பெற்றுக்கொண்ட முன்னேற்றம் பற்றிய அனுபவம் குறித்தும் இதன்போது கலந்துரையாடப்பட்டது.