2026 August 16, Sunday ⛅ கொழும்பு 27° ⛅ யாழ்ப்பாணம் 28° ⛅ கண்டி 24° 🌧️ மட்டக்களப்பு 30°
LIVE
கரைதுறைப்பற்று பிரதேச சபை உப தவிசாளர் உட்பட ஐவர் கைது!நிதி முறைகேடுகள் தொடர்பான தகவல்களை வழங்குமாறு பயனாளிகளுக்கு கோரிக்கை!யாழ்ப்பாண மாவட்ட இராணுவ கட்டளைத் தளபதியால் புதிய வீடு கையளிப்பு!நாடு முழுவதும் 96 பகுதிகள் அதிஅபாய டெங்கு வலயங்களாக அடையாளம்!அவுஸ்திரேலியாவை 9 விக்கெட்டுகளால் வீழ்த்தி பங்களாதேஷ் வரலாற்று வெற்றி!நாட்டின் பெரிய வெங்காயத் தேவையில் 50% உள்நாட்டில் உற்பத்தி செய்ய திட்டம்!கடுவெல வழியாக பயணிப்போருக்கு பொலிஸாரின் முக்கிய அறிவிப்பு!28 ஆண்டுகால சாதனையை முறியடித்த ஜேர்மனியின் ஜூலியன் வெபர்!

குருக்கள்மடம் மனிதப் புதைகுழி விசாரணை ஒத்திவைப்பு !

உள்ளூர்October 9, 2025 · 10 months முன்2
குருக்கள்மடம் மனிதப் புதைகுழி விசாரணை ஒத்திவைப்பு !

1990 ஆம் ஆண்டில் புனித ஹஜ் யாத்திரை முடித்த பின்னர் கல்முனை வழியாக காத்தான்குடிக்கு பயணம் செய்த முஸ்லிம்கள், ஆயுதத்தாரிகளால் இடைமறிக்கப்பட்டு குருக்கள்மடத்தில் கொலை செய்யப்பட்ட சம்பவத்துடன் தொடர்புடைய வழக்கு விசாரணை வியாழக்கிழமை(09.10.2025) களுவாஞ்சிக்குடி நீதிவான் நீதிமன்ற கௌரவ நீதவான் த.பிரதீபன் முன்னிலையில் விசாரணைக்காக எடுத்துக்கொள்ளப்பட்டது.

இவ்வழக்கில் கடந்த 23.09.2025 கொழும்பு பிரதம சட்ட வைத்திய அதிகாரியினால் சமர்ப்பிக்கப்பட்டு இருந்த அகழ்வு தொடர்பான பாதீடு மற்றும் அதனுடைய விரிவாக்கம் மன்றினால் ஏற்றுக்கொள்ளப்பட்டு மட்டக்களப்பு மேல் நீதிமன்றம் ஊடாக நிதி அமைச்சுக்கும் , நீதி அமைச்சுக்கும் அனுப்ப பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.

இவ் வழக்கமானது இன்று ( 09 ) குறித்த செயன்முறை தொடர்பான விடயங்களின் முன்னேற்றங்கள் ஆராய இன்று அழைக்கப்பட்டிருந்ததமை குறிப்பிடத்தக்கது.