2026 August 17, Monday 🌧️ கொழும்பு 26° ⛅ யாழ்ப்பாணம் 28° ⛅ கண்டி 23° ⛅ மட்டக்களப்பு 28°
LIVE
ஹிருணிகா உள்ளிட்ட பிரதிவாதிகளின் வழக்கில் நீதிமன்றத்தின் புதிய உத்தரவு!நுவரெலியா கிரகரி வாவியில் பரபரப்பு – இரண்டு சிறுவர்கள் மீட்பு!பாடப்புத்தக விநியோகத்தில் என்ன நடந்தது? விசாரணையில் வெளியாகும் தகவல்கள்ஆகஸ்ட் 21 முதல் 23 வரை ஹப்புத்தாலையில் பிரமாண்ட உணவுத் திருவிழா!பேராசிரியர் ரவீந்திரநாத் கடத்தல் மற்றும் கொலை வழக்கில் முக்கிய திருப்பம்!யாழ்ப்பாணத்தில் உருவாகிறது வட இலங்கையின் மிக உயரமான கட்டிடம்!இலங்கையில் முதல்முறை வங்கிகளுக்குள்ளேயே முகாமையாளர்கள் கைது!ரூ.770 கோடி மதிப்புள்ள அபூர்வ ஓவியங்கள் திருட்டு!

மகாத்மா காந்தி ஜனன தினம் மட்டக்களப்பில் அனுஷ்டிப்பு !

உள்ளூர்October 2, 2025 · 11 months முன்1
மகாத்மா காந்தி ஜனன தினம் மட்டக்களப்பில் அனுஷ்டிப்பு !

மகாத்மா காந்தி அடிகளாரின் 156 வது ஜனன தினம் மட்டக்களப்பு காந்தி பூங்காவில் அமைந்துள்ள மகாத்மா காந்தியடிகளாரின் நினைவு தூபியில் ஜனன தின நிகழ்வு இன்று மட்டக்களப்பில் அனுஷ்டிக்கப்பட்டது.

மட்டக்களப்பு காந்தி சேவா சங்கத்தின் ஏற்பாட்டில் நடைபெற்ற இந்நிகழ்வில் காந்தியடிகளாரின் திருவுருவச் சிலைக்கு மலர் மாலை அணிவிக்கப்பட்டு, மலரஞ்சலியும் செலுத்தப்பட்டது.

இதன் போது காந்தி சேவா சங்கத்தின் தலைவர் கலாநிதி செல்வேந்திரன் தலைமையில் நடைபெற்ற நிகழ்வில் மட்டக்களப்பு மாநகர சபையின் முதல்வர் சிவம் பாக்கியநாதன் பிரதம அதிதியாக கலந்து கொண்டிருந்ததுடன்,  காந்தி சேவா சங்கத்தின் செயலாளர் க.பாரதிதாசன், வர்த்தக சங்க செயலாளர், சென் ஜோன்ஸ் அம்பியுலன்ஸ் அமைப்பின் மட்டக்களப்பு மாவட்ட தலைவர் மற்றும் சமூக செயற்பாட்டாளர்கள் என பலர் கலந்து கொண்டு மலர் மாலை அணிவித்து மலர் அஞ்சலி செலுத்தினர்.

மேலும், இதன் போது இலங்கை காந்தி சேவா சங்கத்தினால் வெளியிடப்படும் “காந்தியம்” சிறப்பு மலர் அதன் பிரதம ஆசிரியர் எம்.ஷாந்தன் சத்தியகீர்த்தி அவர்களினால் வெளியிட்டு வைக்கப்பட்டதுடன், முதல் நூல் பிரதி பிரதம அதிதி உள்ளிட்ட அதிதிகளுக்கு வழங்கி வைக்கப்பட்டது.