2026 August 16, Sunday ⛅ கொழும்பு 27° ⛅ யாழ்ப்பாணம் 28° ⛅ கண்டி 22° ⛅ மட்டக்களப்பு 29°
LIVE
கரைதுறைப்பற்று பிரதேச சபை உப தவிசாளர் உட்பட ஐவர் கைது!நிதி முறைகேடுகள் தொடர்பான தகவல்களை வழங்குமாறு பயனாளிகளுக்கு கோரிக்கை!யாழ்ப்பாண மாவட்ட இராணுவ கட்டளைத் தளபதியால் புதிய வீடு கையளிப்பு!நாடு முழுவதும் 96 பகுதிகள் அதிஅபாய டெங்கு வலயங்களாக அடையாளம்!அவுஸ்திரேலியாவை 9 விக்கெட்டுகளால் வீழ்த்தி பங்களாதேஷ் வரலாற்று வெற்றி!நாட்டின் பெரிய வெங்காயத் தேவையில் 50% உள்நாட்டில் உற்பத்தி செய்ய திட்டம்!கடுவெல வழியாக பயணிப்போருக்கு பொலிஸாரின் முக்கிய அறிவிப்பு!28 ஆண்டுகால சாதனையை முறியடித்த ஜேர்மனியின் ஜூலியன் வெபர்!

சுகாதாரம் பின்பற்றா உணவகங்களுக்கு எதிராக நடவடிக்ககை !

உள்ளூர்October 2, 2025 · 11 months முன்1
சுகாதாரம்  பின்பற்றா உணவகங்களுக்கு எதிராக நடவடிக்ககை !

நேற்றைய தினம் (30) மன்னார் நகரசபை எல்லைக்ககுற்பட்ட பொது வைத்திய சாலையை சூழ உள்ள உரிய சுகாதார நடை முறைகளை பின் பற்றாது இயங்கி வந்த ஒரு வெதுப்பகம் உட்பட மூன்று உணவகங்கள் மீது பரிசோதனை மேட்கொள்ளப்பட்டது.

இந்நிலையில் மன்னார் நகர சபை சுகாதர பரிசோதகர் மற்றும் மன்னார் நகர சபை சுகாதார குழுவினர் மேற்கொண்ட ஆய்வு நடவடிக்கையின் போதே மேற்படி சுகாதார நடை முறைகளை பின்பற்றாமல் இயங்கி வந்த உணவகங்கள் மீது நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டது.

குறிப்பாக உரிய அனுமதி இன்றி இயங்கி வந்த உணவகங்கள்,கழிவு நீர் உரிய முறையில் அகற்றப்படாமல் இயங்கி வந்த வெதுப்பகம்,மருத்துவ சான்றிதல் இன்றி பணிபுரிந்த ஊழியர்கள்,அதிகளவான இளையான்கள் மற்றும் சுகாதார நடைமுறையை பின் பற்றாது உணவுகள் களஞ்சியப் படுத்தப்பட்டிருந்தமை உள்ளடங்களாக பல்வேறு சுகாதார பிரச்சினைகளின் அடிப்படையில் குறித்த உணவகங்கள் மீது நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டிருந்தது.

அதன் அடிப்படையில் குறித்த உணவகங்களுக்கு எதிராக எதிர் வரும் வியாழக்கிழமை நீதிமன்றத்தில் வழக்கு தாக்கல் செய்யப்படவுள்ளமை குறிப்பிடத்தக்கது.