2026 August 16, Sunday ⛅ கொழும்பு 29° ⛅ யாழ்ப்பாணம் 30° ⛅ கண்டி 28° 🌧️ மட்டக்களப்பு 32°
LIVE
கரைதுறைப்பற்று பிரதேச சபை உப தவிசாளர் உட்பட ஐவர் கைது!நிதி முறைகேடுகள் தொடர்பான தகவல்களை வழங்குமாறு பயனாளிகளுக்கு கோரிக்கை!யாழ்ப்பாண மாவட்ட இராணுவ கட்டளைத் தளபதியால் புதிய வீடு கையளிப்பு!நாடு முழுவதும் 96 பகுதிகள் அதிஅபாய டெங்கு வலயங்களாக அடையாளம்!அவுஸ்திரேலியாவை 9 விக்கெட்டுகளால் வீழ்த்தி பங்களாதேஷ் வரலாற்று வெற்றி!நாட்டின் பெரிய வெங்காயத் தேவையில் 50% உள்நாட்டில் உற்பத்தி செய்ய திட்டம்!கடுவெல வழியாக பயணிப்போருக்கு பொலிஸாரின் முக்கிய அறிவிப்பு!28 ஆண்டுகால சாதனையை முறியடித்த ஜேர்மனியின் ஜூலியன் வெபர்!

ஆசிரியர் சேவைக்கு ஆட்சேர்ப்பு – கல்வி அமைச்சின் அறிவிப்பு.

உள்ளூர்October 1, 2025 · 11 months முன்0
ஆசிரியர் சேவைக்கு ஆட்சேர்ப்பு – கல்வி அமைச்சின் அறிவிப்பு.

நாட்டில் பாடசாலைகளில் பணிபுரியும் அபிவிருத்தி அதிகாரிகளை ஆசிரியர் சேவைக்கு ஆட்சேர்ப்பு செய்வது தொடர்பான அறிவிப்பை கல்வி, உயர்கல்வி மற்றும் தொழிற்கல்வி அமைச்சின் செயலாளர் நாலக கலுவெவவின் கையொப்பத்துடன் வெளியிட்டுள்ளார்.

2023 மார்ச் 25ஆம் திகதி நடைபெறவிருந்த பாடசாலை அபிவிருத்தி அதிகாரிகள் உள்ளிட்ட பட்டதாரிகள் ஆசிரியர் சேவைக்கு ஆட்சேர்ப்பு தொடர்பான போட்டி பரீட்சையைப் பற்றிய வழக்குகள் உயர் நீதிமன்றத்தில் முடிவடைந்துள்ளதாக கல்வி அமைச்சு தெரிவித்துள்ளது.

இருப்பினும், மேன்முறையீட்டு நீதிமன்றத்தில் தொடரப்பட்ட வழக்கு இன்னும் நிலுவையில் உள்ளதால், அதற்குப் பிறகு மட்டுமே அடுத்தகட்ட நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும் என கல்வி, உயர்கல்வி மற்றும் தொழிற்கல்வி அமைச்சு அறிவித்துள்ளது.