2026 August 16, Sunday ⛅ கொழும்பு 29° ⛅ யாழ்ப்பாணம் 30° ⛅ கண்டி 27° 🌧️ மட்டக்களப்பு 31°
LIVE
கரைதுறைப்பற்று பிரதேச சபை உப தவிசாளர் உட்பட ஐவர் கைது!நிதி முறைகேடுகள் தொடர்பான தகவல்களை வழங்குமாறு பயனாளிகளுக்கு கோரிக்கை!யாழ்ப்பாண மாவட்ட இராணுவ கட்டளைத் தளபதியால் புதிய வீடு கையளிப்பு!நாடு முழுவதும் 96 பகுதிகள் அதிஅபாய டெங்கு வலயங்களாக அடையாளம்!அவுஸ்திரேலியாவை 9 விக்கெட்டுகளால் வீழ்த்தி பங்களாதேஷ் வரலாற்று வெற்றி!நாட்டின் பெரிய வெங்காயத் தேவையில் 50% உள்நாட்டில் உற்பத்தி செய்ய திட்டம்!கடுவெல வழியாக பயணிப்போருக்கு பொலிஸாரின் முக்கிய அறிவிப்பு!28 ஆண்டுகால சாதனையை முறியடித்த ஜேர்மனியின் ஜூலியன் வெபர்!

சட்டவிரோத ஜோதிட நிலையம் அமைப்பு – பொலிஸார் விசாரணை !

உள்ளூர்October 1, 2025 · 11 months முன்2
சட்டவிரோத ஜோதிட நிலையம் அமைப்பு – பொலிஸார் விசாரணை !

பருத்தித்துறை தும்பளை பிரதேசத்தில் சுற்றுலா விசா மூலம் இலங்கைக்கு வந்த மூவர், சட்டவிரோத ஜோதிட நிலையம் அமைத்து இயங்கி வந்துள்ளனர் . குறித்த நிலையம் தொடர்பாக தும்பளை பிரதேச கிராம அலுவர் பருத்தித்துறை நகரசபை தவிசாளரின் கவனத்திற்கு கொண்டு சென்றுள்ளார்.

இவ் விடயம் தொடர்பில் நேற்று முன்தினம் பருத்தித்துறை நகர பிதா நேரில் சென்று அவதானித்து குறித்த இந்தியர்களை வெளியேறுமாறு அறிவுறுத்தியுள்ளார்.

ஆனாலும் நேற்று(30) ஜோதிட நிலையம் இயங்கி வந்த நிலையில் நகரபிதா வின்சன் டீ டக்ளஸ் போல் பருத்தித்துறை பொலிஸாருக்கு தகவல் வழங்கியபோது சம்பவ இடத்திற்கு விரைந்த பொலிஸார் இந்தியப் பிரஜைகளன் கடவுச் சீட்டை பரிசோதனை மேட்கொண்டனர். குறித்த மூவரும் சுற்றுலா வீசாவில் நாட்டிற்குள் நுழைந்தமை தெரியவந்தது.

இதனையடுத்து சட்டவிரோத ஜோதிட நிலையம் அமைத்து இயக்கி வந்த மூன்று இந்தியப் பிரஜைகளையும் பொலிஸார் கைது செய்துள்ளமை குறிப்பிடத்தக்கது.