2026 August 17, Monday 🌧️ கொழும்பு 27° ⛅ யாழ்ப்பாணம் 28° ⛅ கண்டி 22° ☀️ மட்டக்களப்பு 27°
LIVE
கரைதுறைப்பற்று பிரதேச சபை உப தவிசாளர் உட்பட ஐவர் கைது!நிதி முறைகேடுகள் தொடர்பான தகவல்களை வழங்குமாறு பயனாளிகளுக்கு கோரிக்கை!யாழ்ப்பாண மாவட்ட இராணுவ கட்டளைத் தளபதியால் புதிய வீடு கையளிப்பு!நாடு முழுவதும் 96 பகுதிகள் அதிஅபாய டெங்கு வலயங்களாக அடையாளம்!அவுஸ்திரேலியாவை 9 விக்கெட்டுகளால் வீழ்த்தி பங்களாதேஷ் வரலாற்று வெற்றி!நாட்டின் பெரிய வெங்காயத் தேவையில் 50% உள்நாட்டில் உற்பத்தி செய்ய திட்டம்!கடுவெல வழியாக பயணிப்போருக்கு பொலிஸாரின் முக்கிய அறிவிப்பு!28 ஆண்டுகால சாதனையை முறியடித்த ஜேர்மனியின் ஜூலியன் வெபர்!

தேக்கு மரக்குற்றிகளை சட்ட விரோதமாக ஏற்றிச் சென்ற சந்தேக நபர் கைது !

உள்ளூர்September 30, 2025 · 11 months முன்0
தேக்கு மரக்குற்றிகளை சட்ட விரோதமாக ஏற்றிச் சென்ற சந்தேக நபர் கைது !

அம்பாறை மாவட்டம் சம்மாந்துறை பிரதேசத்தில் நேற்றையதினம் திங்கட்கிழமை 29ம் திகதி தேக்கு மரக்குற்றிகளை சட்ட விரோதமாக ஏற்றிச் சென்ற செயல் இடம்பெற்றிருக்கிறது. இதற்கமைய சம்மாந்துறை பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி டபிள்யூ.ஏ.என்.நிசாந்த பிரதிப்குமாரவிற்கு கிடைக்கப்பெற்ற தகவலின்படி மேற்கொள்ளப்பட்ட சோதனை நடவடிக்கையின்போது சட்டவிரோத தேக்கு மரக்குற்றிகள் மீட்கப்பட்டு சம்மாந்துறை பிரதேசத்தை சேர்ந்த சந்தேக நபர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.

குறித்த சதேகநபர் சம்மாந்துறை விளினியடி 02 பகுதியைச் சேர்ந்த 49 வயதுடையவர் என சம்மாந்துறை பொலிஸார் சுட்டிக்காட்ட்டியுள்ளனர்.

குறித்த கைது நடவடிக்கையானது கல்முனை பிராந்திய உதவிப் பொலிஸ் அத்தியட்சகர் எம்.கே.இப்னு அசாரின் நெறிப்படுத்தலிற்கமைய சம்மாந்துறை பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி தலைமையிலான பொலிஸ் குழுவினர் முன்னெடுத்திருந்தனர்.

மேலும் கடத்தப்பட்ட மரக்குற்றிகள் உட்பட குறித்த சந்தேக நபர் சம்மாந்துறை நீதிவான் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்த சம்மாந்துறை பொலிஸார் நடவடிக்கை மேற்கொண்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது.