2026 August 16, Sunday ⛅ கொழும்பு 27° ⛅ யாழ்ப்பாணம் 28° ⛅ கண்டி 22° ⛅ மட்டக்களப்பு 29°
LIVE
கரைதுறைப்பற்று பிரதேச சபை உப தவிசாளர் உட்பட ஐவர் கைது!நிதி முறைகேடுகள் தொடர்பான தகவல்களை வழங்குமாறு பயனாளிகளுக்கு கோரிக்கை!யாழ்ப்பாண மாவட்ட இராணுவ கட்டளைத் தளபதியால் புதிய வீடு கையளிப்பு!நாடு முழுவதும் 96 பகுதிகள் அதிஅபாய டெங்கு வலயங்களாக அடையாளம்!அவுஸ்திரேலியாவை 9 விக்கெட்டுகளால் வீழ்த்தி பங்களாதேஷ் வரலாற்று வெற்றி!நாட்டின் பெரிய வெங்காயத் தேவையில் 50% உள்நாட்டில் உற்பத்தி செய்ய திட்டம்!கடுவெல வழியாக பயணிப்போருக்கு பொலிஸாரின் முக்கிய அறிவிப்பு!28 ஆண்டுகால சாதனையை முறியடித்த ஜேர்மனியின் ஜூலியன் வெபர்!

செஞ்சோலையில் நினைவுத்தூபிக்கு நீதியான அங்கீகாரம். #Video

உள்ளூர்September 27, 2025 · 11 months முன்2
செஞ்சோலையில் நினைவுத்தூபிக்கு நீதியான அங்கீகாரம். #Video

முல்லைத்தீவு மாவட்டத்தின் புதுக்குடியிருப்பு பிரதேச செயலாளர் பிரிவுக்குட்ப்பட்ட வள்ளிபுனம் இடைக்கட்டு பகுதியில் அமைந்திருந்த செஞ்சோலை வளாகத்தில் கடந்த 2006.08.14 அன்று

தலைமைத்துவ பயிற்ச்சிக்காக ஒன்றுகூடியிருந்த பாடசாலை மாணவிகளை இலக்கு வைத்து இலங்கை விமானப்படை விமானங்கள் நடாத்திய மிலேச்சத்தனமான தாக்குதலில் 53 மாணவிகள் மற்றும் 4 பணியாளர்களும் உயிரிழந்திருந்தனர்.

இந்நிலையில், குறித்த மாணவிகளின் நினைவாக இடைக்கட்டு வளாகத்தில் நினைவுத்தூபி ஒன்றை அமைக்கவேண்டும் என பலராலும் தொடர் கோரிக்கை முன்வைக்கப்பட்டுவரும் நிலையில் இடைக்கட்டு செஞ்சோலை வளாகத்தை புதுக்குடியிருப்பு பிரதேச சபை ஆளுகைக்கு உட்படுத்தி அங்கு நினைவுத்தூபி ஒன்றை அமைகக்க புதுக்குடியிருப்பு பிரதேச சபையில் ஏகமனதாக தீர்மானம் ஒன்று நிறைவேற்றப்பட்டுள்ளது.