அவுஸ்திரேலியாவில் ராஜ மரியாதை.

தமிழ் சினிமாவின் முன்னணி இசையமைப்பாளரான தேனிசை தென்றல் தேவாவை அவுஸ்திரேலியாவிலுள்ள தமிழ் கலை மற்றும் பண்பாட்டு மையம் கௌரவித்துள்ளது.
அவுஸ்திரேலிய பாராளுமன்றத்தில் தேவாவுக்கு மரியாதை தரப்பட்டு, அவைத் தலைவர் இருக்கையில் அமரவும் வாயப்பளிக்கப்பட்டு, செங்கோலும் வழங்கப்பட்டுள்ளது.
– இது தொடர்பில் தேவா தெரிவிக்கையில்,
“அவுஸ்திரேலிய தமிழ் கலை மற்றும் பண்பாட்டு மே்பாட்டு மையம் எனக்கு வழங்கிய மரியாதை பெருமையளிக்கிறது. எனக்கும் எனது இசைக்குழுவுக்கும் அரிய கௌரவத்தை வழங்கியதற்கு அவுஸ்திரேலிய அரசுக்கு எனது மனமார்ந்த நன்றி.
இந்த கௌரவம் ஒவ்வொரு தெற்காசிய கலைஞருக்கும் சொந்தம். இந்த அங்கீகாரத்தை உங்கள் அனைவருக்கும் சமர்ப்பிக்கிறேன்” எனத் தெரிவித்துள்ளார்.




