2026 September 22, Tuesday 🌧️ கொழும்பு 28° ⛅ யாழ்ப்பாணம் 30° ⛅ கண்டி 27° ⛅ மட்டக்களப்பு 32°
LIVE
சர்வஜன வாக்கெடுப்பு இன்றி 22வது திருத்தம் நிறைவேற்ற வாய்ப்பு2019 தாக்குதல் வழக்கில் இன்று முக்கிய நீதிமன்ற தீர்ப்புஅடுத்த 24 மணித்தியாலங்களில் தீவிர தாழமுக்கமாக மாறும் சாத்தியம்!SLMC தேசியப் பட்டியல்: ஹபீப் ரிபான் பெயர் அதிகாரப்பூர்வமாக அறிவிப்பு!ஜூலையின் 7.2% இலிருந்து ஆகஸ்டில் 8.1% ஆக பணவீக்கம் அதிகரிப்புஅனோஜன் குடும்பத்துக்கு சஜித் உறுதி – விடுதலைக்காக தொடரும் முயற்சிவிமல் வீரவன்ச நீதிமன்றில் ஆஜர் – பிடியாணையை திரும்பப் பெற கோரிக்கை!உச்ச நீதிமன்றத் தீர்ப்புக்குப் பின் ஜனாதிபதி மன்னிப்பை நாடும் ஞானசார தேரர்!

மன்னாரில் 15 வது நாளாக தொடரும் போராட்டம்.

உள்ளூர்August 17, 2025 · 1 year முன்4
மன்னாரில் 15 வது நாளாக தொடரும் போராட்டம்.

மன்னாரில் காற்றாலை கோபுரங்கள் அமைத்தல் மற்றும் கனிய மணல் அகழ்வு ஆகியவற்றுக்கு எதிராக தொடர்ச்சியாக முன்னெடுக்கப்பட்டு வரும் கவனயீர்ப்பு போராட்டம். இன்றைய தினம் ஞாயிற்றுக்கிழமை

15 ஆவது நாளாகவும் சுழற்சி முறையில் முன்னெடுக்கப்பட்டு வருகின்றது.

மன்னார் மக்கள் மற்றும் இளையோர் ஒன்றிணைந்து முன்னெடுத்து வருகின்ற போராட்டத்திற்கு இன்றைய தினம் ஞாயிற்றுக்கிழமை (17) ஆதரவு வழங்கும் வகையில் பள்ளிமுனை மற்றும் பெரிய கரிசல் ஆகிய கிராமங்களைச் சேர்ந்த நூற்றுக்கணக்கான மக்கள் குறித்த போராட்டத்தில் இணைந்து கொண்டு தமது ஆதரவை தெரிவித்து வருகின்றனர்.

மேலும் மன்னாரைச் சேர்ந்த யாழ் பல்கலைக்கழக கலைப்பீட மாணவர்களும் இவ் போராட்டத்தில் பங்கேற்றனர்.

குறித்த போராட்டத்தில் ஈடுபட்ட மக்கள் தலையில் கருப்பு பட்டி அணிந்து போராட்டத்தை முன்னெடுத்து வருகின்றனர்.இன்றைய போராட்டத்தில் தமிழ் மக்களும், அருட் சகோதரிகளும், முஸ்லிம் மக்களும் மத தலைவர்களும்,ஒன்றிணைந்துள்ளனர்.

இன்றைய தினம் (17) காலை முதல் முன்னெடுக்கப்பட்டு வருகின்ற குறித்த போராட்டமானது மன்னார் நகர சுற்றுவட்ட பகுதியில் இடம் பெற்று வருகிறது.போராட்டத்தில் ஈடுபட்ட மக்கள் பல்வேறு வாசகங்கள் எழுதப்பட்ட பதாகைகளை ஏந்தியவாறு கோஷங்களை எழுப்பி போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது.