2026 August 16, Sunday ⛅ கொழும்பு 28° ⛅ யாழ்ப்பாணம் 28° ⛅ கண்டி 25° 🌧️ மட்டக்களப்பு 31°
LIVE
கரைதுறைப்பற்று பிரதேச சபை உப தவிசாளர் உட்பட ஐவர் கைது!நிதி முறைகேடுகள் தொடர்பான தகவல்களை வழங்குமாறு பயனாளிகளுக்கு கோரிக்கை!யாழ்ப்பாண மாவட்ட இராணுவ கட்டளைத் தளபதியால் புதிய வீடு கையளிப்பு!நாடு முழுவதும் 96 பகுதிகள் அதிஅபாய டெங்கு வலயங்களாக அடையாளம்!அவுஸ்திரேலியாவை 9 விக்கெட்டுகளால் வீழ்த்தி பங்களாதேஷ் வரலாற்று வெற்றி!நாட்டின் பெரிய வெங்காயத் தேவையில் 50% உள்நாட்டில் உற்பத்தி செய்ய திட்டம்!கடுவெல வழியாக பயணிப்போருக்கு பொலிஸாரின் முக்கிய அறிவிப்பு!28 ஆண்டுகால சாதனையை முறியடித்த ஜேர்மனியின் ஜூலியன் வெபர்!

மின்சார வழங்கலை அத்தியாவசிய சேவையாக அறிவித்த வர்த்தமானி பாராளுமன்றத்திற்கு

உள்ளூர்September 24, 2025 · 11 months முன்0
மின்சார வழங்கலை அத்தியாவசிய சேவையாக அறிவித்த வர்த்தமானி  பாராளுமன்றத்திற்கு

மின்சாரம் வழங்கல் தொடர்பான சகல சேவைகளும் அத்தியாவசிய சேவைகளாகப் பிரகடனப்படுத்தி ஜனாதிபதியினால் வெளியிடப்பட்ட வர்த்தமானி அறிவித்தலை அனுமதிக்காக நாளை பாராளுமன்றத்தில் சமர்ப்பிக்க தீர்மானிக்கப்பட்டுள்ளது.

சபாநாயகர் ஜகத் விக்கிரமரத்ன தலைமையில் இன்று நடைபெற்ற பாராளுமன்ற அலுவல்கள் பற்றிய குழுக் கூட்டத்தில் இந்த தீர்மானம் மேற்கொள்ளப்பட்டுள்ளது.

1979ஆம் ஆண்டின் 61ஆம் இலக்க அத்தியாவசிய பொதுச் சேவைகள் சட்டத்தின் கீழ் நேற்று முன்தினம் ஜனாதிபதியினால் வெளியிடப்பட்ட 2454/68 ஆம் இலக்க வர்த்தமானி அறிவித்தலே நாடாளுமன்றத்தில் விவாதம் இன்றி அனுமதிக்காக முன்வைக்கப்படவுள்ளது.