அதிகரிக்கும் சுற்றுலா பயணிகளின் வருகை.

நாட்டில் இந்த மாதத்தின் முதல் 14 நாட்களில் மொத்தம் 75,358 சுற்றுலாப் பயணிகள் வருகை தந்துள்ளதாக சுற்றுலா அபிவிருத்தி அதிகார சபை தெரிவித்துள்ளது.
அவர்களில் இந்தியாவிலிருந்து அதிகளவான சுற்றுலா பயணிகள் 21,389 பேர் வருகை தந்துள்ளதாகவும், இந்த ஆண்டில் மொத்தமாக இதுவரை 16,41,881 சுற்றுலாப் பயணிகள் நாட்டிற்கு வந்துள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.




