2026 August 16, Sunday ⛅ கொழும்பு 27° ⛅ யாழ்ப்பாணம் 28° ⛅ கண்டி 22° ⛅ மட்டக்களப்பு 29°
LIVE
கரைதுறைப்பற்று பிரதேச சபை உப தவிசாளர் உட்பட ஐவர் கைது!நிதி முறைகேடுகள் தொடர்பான தகவல்களை வழங்குமாறு பயனாளிகளுக்கு கோரிக்கை!யாழ்ப்பாண மாவட்ட இராணுவ கட்டளைத் தளபதியால் புதிய வீடு கையளிப்பு!நாடு முழுவதும் 96 பகுதிகள் அதிஅபாய டெங்கு வலயங்களாக அடையாளம்!அவுஸ்திரேலியாவை 9 விக்கெட்டுகளால் வீழ்த்தி பங்களாதேஷ் வரலாற்று வெற்றி!நாட்டின் பெரிய வெங்காயத் தேவையில் 50% உள்நாட்டில் உற்பத்தி செய்ய திட்டம்!கடுவெல வழியாக பயணிப்போருக்கு பொலிஸாரின் முக்கிய அறிவிப்பு!28 ஆண்டுகால சாதனையை முறியடித்த ஜேர்மனியின் ஜூலியன் வெபர்!

ஜனாதிபதி – உலக வங்கி பிரதிநிதிகள் சந்திப்பு.

உள்ளூர்September 16, 2025 · 11 months முன்0
ஜனாதிபதி – உலக வங்கி  பிரதிநிதிகள் சந்திப்பு.

ஜனாதிபதி அனுர குமார திசாநாயக்கவை, உலக வங்கி குழுமத்தின் தெற்காசிய பிராந்திய உப தலைவர் ஜோஹன்னஸ் ஸட் தலைமையிலான பிரதிநிதிகள், வை நேற்று (15) சந்தித்து இலங்கையின் பொருளாதார முன்னேற்றம் தொடர்பாக விரிவான கலந்துரையாடலில் ஈடுபட்டனர்.

– இவ் சந்திப்பின் போது,

உலக வங்கி, இலங்கையின் தற்போதைய பொருளாதார திட்டத்திற்கு பாராட்டுகளை தெரிவித்தது.

மேலும், வேலைவாய்ப்பு, வளர்ச்சி மற்றும் முதலீடுகளை ஊக்குவிக்கும் திட்டங்களை மையமாக்க வேண்டும் என பரிந்துரை செய்யப்பட்டது. டிஜிட்டல் மயமாக்கல், சுற்றுலா, விவசாயம், உள்கட்டமைப்பு, மற்றும் வடக்கு கிழக்கு மாகாண வளர்ச்சி தொடர்பாக விசேட கவனம் செலுத்தப்பட்டது.

முதலீடுகளுக்கு உகந்த சட்டப்பூர்வ கட்டமைப்புகள் குறித்து விவாதிக்கப்பட்டது. குறிப்பாக இலங்கை தற்போது வெளிப்படைத்தன்மை வாய்ந்த ஆட்சி மூலம், ஊழலற்ற, நிலையான வளர்ச்சியை நோக்கிச் சென்று கொண்டிருப்பதாக ஜனாதிபதி கூறினார்.