2026 August 16, Sunday ⛅ கொழும்பு 27° ⛅ யாழ்ப்பாணம் 28° ⛅ கண்டி 24° 🌧️ மட்டக்களப்பு 30°
LIVE
கரைதுறைப்பற்று பிரதேச சபை உப தவிசாளர் உட்பட ஐவர் கைது!நிதி முறைகேடுகள் தொடர்பான தகவல்களை வழங்குமாறு பயனாளிகளுக்கு கோரிக்கை!யாழ்ப்பாண மாவட்ட இராணுவ கட்டளைத் தளபதியால் புதிய வீடு கையளிப்பு!நாடு முழுவதும் 96 பகுதிகள் அதிஅபாய டெங்கு வலயங்களாக அடையாளம்!அவுஸ்திரேலியாவை 9 விக்கெட்டுகளால் வீழ்த்தி பங்களாதேஷ் வரலாற்று வெற்றி!நாட்டின் பெரிய வெங்காயத் தேவையில் 50% உள்நாட்டில் உற்பத்தி செய்ய திட்டம்!கடுவெல வழியாக பயணிப்போருக்கு பொலிஸாரின் முக்கிய அறிவிப்பு!28 ஆண்டுகால சாதனையை முறியடித்த ஜேர்மனியின் ஜூலியன் வெபர்!

கட்சிக்கு விரோதமாக செயற்பட்டவர்களுக்கு எதிராக கடும் நடவடிக்கை-பதில் பொதுச் செயலாளர் எம் ஏ.சுமந்திரன்

உள்ளூர்September 15, 2025 · 11 months முன்2
கட்சிக்கு விரோதமாக செயற்பட்டவர்களுக்கு எதிராக கடும் நடவடிக்கை-பதில் பொதுச் செயலாளர் எம் ஏ.சுமந்திரன்

கடந்த ஜனாதிபதி  பாராளுமன்ற மற்றும் உள்ளூராட்சி தேர்தல்களில் எமது கட்சிக்கு விரோதமாக செயற்பட்டவர்களுக்கு எதிராக கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என  இலங்கைத் தமிழரசுக் கட்சியின் பதில் பொதுச் செயலாளர் எம் ஏ.சுமந்திரன் தெரிவித்தார்.

இலங்கைத் தமிழரசுக் கட்சியின் மத்திய செயற்குழு கூட்டம் அம்பாறை மாவட்டம் ஆலையடிவேம்பு பகுதியில்  நடைபெற்றதுடன் தொடர்ந்து  நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில்  அவர் இவ்வாறு தெரிவித்தார்.


இந்த அவதானிப்பு காலத்தில் அவர்கள் கட்சிக்குள்ளும் கட்சி மூலமும் புதிய பொறுப்பு எதையும் பெற வாய்ப்பளிக்கப்பட மாட்டாது.ஒழுக்காற்று நடவடிக்கையின் ஓர் அங்கமாக விளக்கம் கோரி கடிதம் அனுப்பப்பட்ட உறுப்பினர்களில் இன்னும் 12 பேர் பதில் அளிக்கவில்லை எனவும் மேலும் திருகோணமலை மாவட்டத்தில் அத்தகைய அறுவர் விளக்கம் கோரி அனுப்பப்பட்ட கடிதங்களை ஏற்க மறுத்து  அஞ்சல் தரப்பிடம்  அவற்றைத் திருப்பி விட்டுள்ளனர் என்று கூட்டத்தில் தெரிவிக்கப்பட்டது.

பொதுச் செயலாளரிடமிருந்து அனுப்பப்பட்ட கடிதத்தை ஏற்க மறுத்தமை மிமோசமான விடயம் என்றுகூட்டத்தில் சுட்டிக்காட்டப்பட்டதுஅத்தகையோருக்கும்இ விளக்கம்அனுப்பத் தவறிய ஏனையோருக்கும்அவர்கள் இடமிருந்து இந்த விவகாரத்தில் விளக்கம் அளிப்பதற்கு விடயம்எதுவும் இல்லை என்று கருதப்படுவதாக நினைவூட்டல் கடிதம் ஒன்றை அனுப்பவும்  அதன் பின்னரும் அவர்கள் பதிலளிக்காமல் விட்டால் அவர்களுக்கு எதிராக நடவடிக்கை எடுக்கப்படுகிறது அதன் அடிப்படையில் அடுத்த இரண்டு வருடங்களுக்குக் கட்சிக்குள் புதிய பொறுப்புக்கள் எதுவும் வழங்கப்படாமல் அவர்களின் நடத்தை அவதானிக்கப்படும் என்று அவர்களுக்கு அறிவுறுத்தவும் கூட்டத்தில் முடிவு செய்யப்பட்டது என்றார்.