புதிய பொலிஸ்மா அதிபர் – இராணுவத் தளபதி சந்திப்பு.

புதிய பொலிஸ்மா அதிபர் பிரியந்த வீரசூரிய, நேற்று (12) இராணுவத் தலைமையகத்தில் இராணுவத் தளபதி லெப்டினன் ஜெனரல் லசந்த ரொட்ரிகோவை மரியாதை நிமித்தமாக சந்தித்துள்ளார்.
வருகைதந்த புதிய பொலிஸ்மா அதிபர் பிரியந்த வீரசூரியவிற்கு, இராணுவ மரியாதை மற்றும் அணிவகுப்பு வழங்கப்பட்டதுடன், உயர்மட்ட இராணுவ அதிகாரிகளுடன் அறிமுகமும், முழுக்குழு கலந்துரையாடலும் நடைபெற்றது.
சந்திப்பின் போது, இராணுவம் மற்றும் பொலிஸ் சேவைகளுக்கு இடையிலான ஒத்துழைப்பின் முக்கியத்துவம் குறித்து உரையாடப்பட்டது. நிகழ்வின் நிறைவில், நினைவுப் பரிசுகள் பரிமாறப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.




