கைதா ? இல்லையா ? உதய கம்மன்பில மனு ஒத்திவைப்பு.

முன்னாள் அமைச்சர் உதய கம்மன்பிலவை கைதுசெய்வது குறித்து இதுவரை எந்த முடிவும் எடுக்கப்படவில்லை என குற்றப் புலனாய்வுத் திணைக்களம் தெரிவித்துள்ளது.
ஐக்கிய நாடுகளின் சிவில் மற்றும் அரசியல் உரிமைகள் தொடர்பான சட்டத்தின் கீழ் குற்றப் புலனாய்வுத் திணைக்களம் தன்னை கைதுசெய்யத் தயாராவதால், தன்னைக் கைதுசெய்வதைத் தடுக்க வேண்டும் என கோரி உதய கம்மன்பில தாக்கல் செய்த மனு இன்று மேன்முறையீட்டு நீதிமன்றத்தில் விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டது.
மேலும், இந்த மனு, எதிர்வரும் செப்டம்பர் 17ஆம் திகதிக்கு ஒத்திவைக்கப்பட்டுள்ளது.




