வீதி விபத்துகளினால் அதிகரிக்கும் உயிரிழப்புக்கள்

நாடளாவிய ரீதியில் இடம்பெற்ற வீதி விபத்துகளில் 1,870 பேர் உயிரிழந்துள்ளதுடன், 1,757 வீதி விபத்துகள் நேர்ந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
2025ஆம் ஆண்டு ஜனவரி மாதம் முதலாம் திகதி முதல் செப்டம்பர் மாதம் 4ஆம் திகதி வரையான காலப்பகுதி கணக்கிடப்பட்டுள்ளதாக தெரியவருகிறது.
இந்நிலையில் வீதி விபத்துகளினால் நாளாந்தம் 7 முதல் 8 பேர் வரை உயிரிழப்பதாகவும் பொலிஸார் குறிப்பிட்டுள்ளனர்.
இந்தநிலையில், சாரதிகள், பாதசாரிகள் மற்றும் பயணிகள் உள்ளிட்ட அனைவரும் போக்குவரத்து விதிகளை கடைப்பிடிக்க வேண்டும் என பொலிஸார் தெரிவிக்கின்றனர்.