புதிய ஐபோன்களுடன் ஆப்பிளின் அடுத்த தலைமுறை தொடக்கம்!

ஆப்பிள் நிறுவனம் நேற்று (09) இரவு பெரிதும் எதிர்பார்க்கப்பட்ட ‘டுயோ’ எனப்படும் மடிக்கக்கூடிய ஐபோன் உட்பட, தனது புதிய தலைமுறை ஐபோன் மாடல்களை அறிமுகம் செய்தது.
செப்டம்பர் 1 ஆம் திகதி டிம் குக்கிற்குப் பிறகு பொறுப்பேற்ற நிறுவனத்தின் புதிய தலைமை செயல் அதிகாரி ஜான் டெர்னஸ், ஸ்டீவ் ஜாப்ஸ் தியேட்டரில் இந்த சமீபத்திய ஐபோன் சீரிசை அறிமுகம் செய்தார்.
ஐபோன், ஆப்பிள் வாட்ச் மற்றும் ஏர்பாட்ஸ் ஆகியவற்றில் உள்ள மற்ற மேம்படுத்தல்கள் மற்றும் செயற்கை நுண்ணறிவு முன்னேற்றங்கள் குறித்து விளக்கிய பிறகு, டெர்னஸ் பார்வையாளர்களிடம், “உண்மையில் இன்னும் ஒரு விஷயம் இருக்கிறது,” என்று கூறினார். இது, 1970 களில் வந்த ‘கொலம்போ’ என்ற துப்பறியும் நிகழ்ச்சியில் இருந்து ஸ்டீவ் ஜாப்ஸ் கூறிய அவரது வர்த்தக முத்திரை சொற்றொடரை குறிப்பிடும் விதமாக இருந்தது.
‘டுயோ’ என்று அழைக்கப்படும் இந்த தொலைபேசியில், “ஐபோன்களிலேயே இதுவரை இல்லாத மிகப்பெரிய திரை உள்ளது, ஆனாலும் அது உங்கள் பாக்கெட்டில் பொருந்துகிறது,” என்று டெர்னஸ் கூறினார்.
இந்த போன், சமீபத்திய ஐபோன் 18 ப்ரோவை விட 80% பெரியதான 7.6 இன்ச் திரையை கொண்டுள்ளது. இது, முன்பு ஐபேட் பயனர்களுக்கு மட்டுமே இருந்த ஆப்பிள் பென்சிலை போனில் பயன்படுத்த அனுமதிக்கிறது.
“மடிக்கக்கூடிய போனை பயன்படுத்தும் அனுபவத்தை டியோ மறுவரையறை செய்யும்” என்று டெர்னஸ் கூறினார்.
ஆப்பிள் தனது ஐபோன் 18 ப்ரோ மற்றும் 18 ப்ரோ மேக்ஸ் ஆகிய புது ஐபோன்களை அறிமுகம் செய்தது. இவை பேட்டரி, கேமரா மற்றும் செயல்திறனில் மேம்பாடுகளை கொண்டு வருகின்றன என்று டெர்னஸ் கூறினார்.
புதிய ஐபோன் 18 ப்ரோ மற்றும் 18 ப்ரோ மேக்ஸ் மாடல்களில் நீண்ட பேட்டரி பேக்கப் மற்றும் ஃபாஸ்ட் சார்ஜிங் வசதி இடம்பெற்றுள்ளன.
மேலும், ஆப்பிள் தனது புதிய ஐபோன்களில் சிரியின் புதிய AI திறன்களிலும் கவனம் செலுத்துகிறது. AI-ஐ இணைப்பதில் தங்களை விட முன்னேறியுள்ள போட்டியாளர்களிடம் இருந்து தனித்து நிற்பதற்காக, தனியுரிமை மற்றும் பாதுகாப்பிற்கு முக்கியத்துவம் அளிக்கிறது.




