2026 September 7, Monday ⛅ கொழும்பு 31° ⛅ யாழ்ப்பாணம் 31° ⛅ கண்டி 31° ⛅ மட்டக்களப்பு 33°
LIVE
சத்யா நிகேதனில் கட்டிடம் சரிந்து பெரும் விபத்து!ஜெனிவாவில் இன்று இலங்கை மனித உரிமைகள் அறிக்கை முன்வைப்பு!சுற்றுலாப் பயணம் சோகத்தில் முடிந்தது – 25 பேர் உ#யிரிழப்பு!இலங்கை குறித்து ஐ.நா. மனித உரிமைகள் பேரவையில் முக்கிய அறிக்கை!பங்களாதேஷுக்கு எதிராக இலங்கை மகளிர் அணி வெற்றி!இந்தியா சென்ற 13 பேர் மீண்டும் இலங்கைக்கு திருப்பி அனுப்பப்பட்டனர்!இன்று 12:08க்கு 6 பகுதிகளுக்கு மேலாக சூரியன் உச்சம்!பிரபல தொலைக்காட்சி தொகுப்பாளர் உட்பட 11 பேருக்கு மர#ண தண்டனை!

சுற்றுலாப் பயணம் சோகத்தில் முடிந்தது – 25 பேர் உ#யிரிழப்பு!

உலகம்September 7, 2026 · 2 hours முன்3
சுற்றுலாப் பயணம் சோகத்தில் முடிந்தது – 25 பேர் உ#யிரிழப்பு!

மேற்கு ஆபிரிக்கத் தீவு நாடான கேப் வெர்டேவின் போகோ தீவில் பேருந்து ஒன்று பள்ளத்தாக்கில் கவிழ்ந்து விபத்துக்குள்ளானதில், சிறுவர்கள் மற்றும் பதின்ம வயதினர் உட்படக் குறைந்தபட்சம் 25 பேர் உயிரிழந்துள்ளனர்.

32 பயணிகளுடன் சென்ற அந்தப் பேருந்து கட்டுப்பாட்டை இழந்து, சுமார் 30 மீட்டர் ஆழமுள்ள பாறைகள் நிறைந்த பள்ளத்தாக்கில் கவிழ்ந்தது.

இதில் ஓட்டுநர் உட்பட 25 பேர் உயிரிழந்தனர். படுகாயமடைந்த பலர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

பாடசாலை பருவத்தின் போது தான் தினமும் அழைத்துச் செல்லும் மாணவர்களுக்குப் பரிசளிக்கும் விதமாக, அந்தப் பேருந்தின் ஓட்டுநர் ஆண்டுதோறும் தனது சொந்தச் செலவில் இந்தச் சுற்றுலாப் பயணத்தை ஏற்பாடு செய்து வந்துள்ளார்.

பொதுவாக கேப் வெர்டே தீவுகளில் வீதிகள் நல்ல நிலையில் இருக்கும் என்பதால், இதுபோன்ற கோர விபத்துகள் அங்கு மிக அரிதாகவே நிகழும் என்பது குறிப்பிடத்தக்கது.