2026 September 6, Sunday ⛅ கொழும்பு 30° ⛅ யாழ்ப்பாணம் 30° 🌧️ கண்டி 26° 🌧️ மட்டக்களப்பு 31°
LIVE
7 மாவட்டங்களை வாட்டும் வறட்சி – குடிநீர் விநியோகம் தீவிரம்!NPP மக்கள் பேரணி இன்று ஆரம்பம் – சிறிகொத்தவில் UNP கொண்டாட்டம்!இருமுறை முயன்றும் வெடிக்காத து#ப்பாக்கி – கொஸ்கொடவில் பரபரப்பு!பூட்டான் பயணத்தை முடித்து இலங்கை திரும்பினார் பிரதமர் ஹரிணி!80 ஆண்டுகளைக் கடந்த ஐக்கிய தேசியக் கட்சியின் அரசியல் பயணம்!டைமண்ட் லீக் மகுடத்தை வென்ற ருமேஷ் தரங்க!மழையும் சூரியன் உச்சமும் – இன்றைய வானிலை நிலவரம்!தோட்டத் தொழிலாளர்களின் வேதனப் பிரச்சினைக்கு தீர்வு வேண்டும்!

NPP மக்கள் பேரணி இன்று ஆரம்பம் – சிறிகொத்தவில் UNP கொண்டாட்டம்!

உள்ளூர்September 6, 2026 · 1 hour முன்1
NPP மக்கள் பேரணி இன்று ஆரம்பம் – சிறிகொத்தவில் UNP கொண்டாட்டம்!

தேசிய மக்கள் சக்தி அரசாங்கத்தின் 2ஆம் ஆண்டு நிறைவையொட்டி ஏற்பாடு செய்யப்பட்டுள்ள விசேட மக்கள் பேரணித் தொடர் இன்று (06) முதல் ஆரம்பமாகின்றது.

ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்க தலைமையில் களுத்துறை மாவட்டத்தை மையமாகக் கொண்டு இந்தப் பேரணித் தொடர் ஆரம்பமாகவுள்ளது.

இதற்கமைய, முதலாவது மக்கள் பேரணி இன்று பிற்பகல் 02.00 மணிக்கு புளத்சிங்கள பகுதியில் நடைபெறவுள்ளதுடன், இரண்டாவது பேரணி பிற்பகல் 03.30 மணிக்கு பேருவளையில் நடைபெறவுள்ளது.

இதற்கு மேலதிகமாக பொலன்னறுவை, அனுராதபுரம், மாத்தறை மற்றும் கம்பஹா ஆகிய மாவட்டங்களை மையமாகக் கொண்டும் எதிர்வரும் நாட்களில் பேரணிகளை நடத்துவதற்கு தேசிய மக்கள் சக்தி கட்சியினர் ஏற்பாடுகளை செய்துள்ளனர்.

இதேவேளை, ஐக்கிய தேசியக் கட்சியின் 80ஆவது ஆண்டு நிறைவு விழாவும் இன்றைய தினம் நடைபெறவுள்ளது.

ஸ்ரீ ஜயவர்தனபுர கோட்டையிலுள்ள ‘சிறிகொத்த’ கட்சித் தலைமையகத்தில் நடைபெறவுள்ள இந்த நிகழ்வு, கட்சியின் தலைவரும் முன்னாள் ஜனாதிபதியுமான ரணில் விக்ரமசிங்க தலைமையில் நடைபெறவுள்ளது.