2026 October 17, Saturday ⛅ கொழும்பு 24° 🌧️ யாழ்ப்பாணம் 27° ⛅ கண்டி 22° ⛅ மட்டக்களப்பு 26°
LIVE
நாமல் இன்றும் நீதிமன்றில் ஆஜர் !சவாலுக்கு மத்தியிலும்பொருளாதார ஸ்த்திரம் இலங்கைக்கு ஐ.நா வாழ்த்து !ஈராக்கில் இருந்து முழுமையாக வௌியேறும் அமெரிக்க படைகள் !தேசிய போக்குவரத்து ஆணைக்குழுவின் முன்னாள் தலைவர் ரேணுக பெரேரா பிணையில் விடுதலை.கிரிஷ் வழக்கில் நாமல் ராஜபக்ஷ நான்காவது பிரதிவாதியாகப் பெயரிடப்பட்டுள்ளார்.ரூ.21 மில்லியன் நிதி மோசடி வழக்கிலிருந்து உதய கம்மன்பில விடுதலை.பேரனர்த்தங்களின்போதான பதிலளிப்பு மற்றும் மனிதாபிமான உதவிகளில் ஒத்துழைப்பை அதிகரிக்கத் திட்டம்.ஈரான் சரணடைந்தால் கச்சா எண்ணெய் விலை கடுமையாக வீழ்ச்சியடையும் – ட்ரம்ப்.

பொலன்னறுவை நீர்த்தேக்கங்களில் வேகமாக குறையும் நீர்மட்டம்!

உள்ளூர்August 29, 2026 · 2 months முன்15
பொலன்னறுவை நீர்த்தேக்கங்களில் வேகமாக குறையும் நீர்மட்டம்!

பொலன்னறுவை மாவட்டத்தின் இரண்டாவது மிகப்பெரிய நீர்த்தேக்கமான மின்னேரிய குளத்தின் நீர்மட்டம் 36% வரை மேலும் குறைவடைந்துள்ளது. 

அந்நீர்த்தேக்கத்தின் மொத்தக் கொள்ளளவு 110,000 ஏக்கர் அடி ஆகும் என்பதுடன், அது தற்போது 40,000 ஏக்கர் அடி வரை குறைவடைந்துள்ளது. 

எப்படியிருப்பினும், மின்னேரிய நீர்த்தேக்கத்திலிருந்து இம்முறை சிறுபோகச் செய்கைக்கான வயல்களுக்கு நீர் விநியோகிக்கும் நடவடிக்கை இன்னும் இரண்டு நாட்களில் நிறைவடையவுள்ளது. 

பொலன்னறுவையின் மிகப்பெரிய நீர்த்தேக்கமான பராக்கிரம சமுத்திரத்தின் நீர்மட்டமும் தற்போது குறிப்பிடத்தக்களவில் குறைவடைந்துள்ளது. 

அதன் மொத்தக் கொள்ளளவு 116,000 ஏக்கர் அடி ஆகும் போதிலும், தற்போது அது 63,000 ஏக்கர் அடி வரை குறைவடைந்துள்ளதுடன், இது அதன் மொத்தக் கொள்ளளவில் 56% ஆகும். 

தற்போது சிறுபோகச் செய்கைக்காக அந்நீர்த்தேக்கத்திலிருந்து நீர் விநியோகிக்கும் நடவடிக்கை நிறைவு செய்யப்பட்டுள்ளதாகக் குறிப்பிடப்படுகிறது. 

அதேபோல் 21,600 ஏக்கர் அடி கொள்ளளவைக் கொண்ட கிரித்தலே நீர்த்தேக்கத்தின் நீர்மட்டமும் வேகமாகக் குறைவடைந்து வருவதுடன், தற்போது அது 8,500 ஏக்கர் அடியை விடக் குறைவடைந்துள்ளது. 

எப்படியிருப்பினும், அந்நீர்த்தேக்கத்திலிருந்தும் சிறுபோகச் செய்கைக்காக நீர் திறந்துவிடும் நடவடிக்கை தற்போது நிறுத்தப்பட்டுள்ளது.