தேசபந்துவிற்கு எதிரான வழக்கு ஒத்திவைப்பு

தேசபந்து தென்னகோனை பொலிஸ் மா அதிபராக நியமித்தமை அரசியலமைப்பிற்கு முரணானது என தீர்ப்பளிக்கக் கோரி, தாக்கல் செய்யப்பட்ட மனுக்கள் அடுத்த வருடம் விசாரணைக்கு எடுத்துக்கொள்வதற்கு உயர்நீதிமன்றம் தீர்மானித்துள்ளது.
இந்த மனுக்கள் இன்று (08) தலைமை நீதிபதி பிரீத்தி பத்மன் சூரசேன, மஹிந்த சமயவர்தன மற்றும் அர்ஜுன ஒபேசேகர ஆகிய மூவர் அடங்கிய நீதிபதிகள் அமர்வு முன்னிலையில் விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டன.
குறித்த மனு மீதான விசாரணை எதிர்வரும் 2026ஆம் ஆண்டு பெப்ரவரி மாதம் 12ஆம் திகதி எடுத்துக்கொள்ள நீதிபதிகள் அமர்வு உத்தரவிட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.




