2026 October 14, Wednesday ⛅ கொழும்பு 25° 🌧️ யாழ்ப்பாணம் 26° ⛅ கண்டி 23° 🌧️ மட்டக்களப்பு 25°
LIVE
நாமல் இன்றும் நீதிமன்றில் ஆஜர் !சவாலுக்கு மத்தியிலும்பொருளாதார ஸ்த்திரம் இலங்கைக்கு ஐ.நா வாழ்த்து !ஈராக்கில் இருந்து முழுமையாக வௌியேறும் அமெரிக்க படைகள் !தேசிய போக்குவரத்து ஆணைக்குழுவின் முன்னாள் தலைவர் ரேணுக பெரேரா பிணையில் விடுதலை.கிரிஷ் வழக்கில் நாமல் ராஜபக்ஷ நான்காவது பிரதிவாதியாகப் பெயரிடப்பட்டுள்ளார்.ரூ.21 மில்லியன் நிதி மோசடி வழக்கிலிருந்து உதய கம்மன்பில விடுதலை.பேரனர்த்தங்களின்போதான பதிலளிப்பு மற்றும் மனிதாபிமான உதவிகளில் ஒத்துழைப்பை அதிகரிக்கத் திட்டம்.ஈரான் சரணடைந்தால் கச்சா எண்ணெய் விலை கடுமையாக வீழ்ச்சியடையும் – ட்ரம்ப்.

22 ஆவது திருத்தத்திற்கு எதிராக உயர் நீதிமன்றத்தில் முதலாவது மனு!

உள்ளூர்August 18, 2026 · 2 months முன்13
22 ஆவது திருத்தத்திற்கு எதிராக உயர் நீதிமன்றத்தில் முதலாவது மனு!

அமைச்சரவையினால் அங்கீகரிக்கப்பட்டுள்ள அரசியலமைப்பின் 22 ஆவது திருத்தச் சட்டமூலம் அரசியலமைப்பிற்கு முரணானது எனத் தீர்ப்பளிக்குமாறு கோரி உயர் நீதிமன்றத்தில் இன்று (18) முதலாவது மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது. 

இலங்கை சட்டத்தரணிகள் சங்கத்தின் பொருளாளர் டி.எம்.எஸ். பசிது சில்வா மற்றும் அச்சங்கத்தின் உதவிச் செயலாளர் ஆகியோரால் இம்மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது. 

குறித்த சட்டமூலத்தை நிறைவேற்றுவதற்குத் தேவை எனின், அது பாராளுமன்றத்தில் மூன்றில் இரண்டு பெரும்பான்மை வாக்கினால் அங்கீகரிக்கப்பட்டு, சர்வஜன வாக்கெடுப்பு ஒன்றின் மூலமும் அங்கீகரிக்கப்பட வேண்டும் எனத் தீர்ப்பளிக்குமாறு மனுதாரர்கள் கோரியுள்ளனர்.