2026 August 17, Monday 🌧️ கொழும்பு 26° ⛅ யாழ்ப்பாணம் 28° ⛅ கண்டி 22° ⛅ மட்டக்களப்பு 28°
LIVE
கரைதுறைப்பற்று பிரதேச சபை உப தவிசாளர் உட்பட ஐவர் கைது!நிதி முறைகேடுகள் தொடர்பான தகவல்களை வழங்குமாறு பயனாளிகளுக்கு கோரிக்கை!யாழ்ப்பாண மாவட்ட இராணுவ கட்டளைத் தளபதியால் புதிய வீடு கையளிப்பு!நாடு முழுவதும் 96 பகுதிகள் அதிஅபாய டெங்கு வலயங்களாக அடையாளம்!அவுஸ்திரேலியாவை 9 விக்கெட்டுகளால் வீழ்த்தி பங்களாதேஷ் வரலாற்று வெற்றி!நாட்டின் பெரிய வெங்காயத் தேவையில் 50% உள்நாட்டில் உற்பத்தி செய்ய திட்டம்!கடுவெல வழியாக பயணிப்போருக்கு பொலிஸாரின் முக்கிய அறிவிப்பு!28 ஆண்டுகால சாதனையை முறியடித்த ஜேர்மனியின் ஜூலியன் வெபர்!

மாத்தறை முதல் பொத்துவில் வரை மீனவர்களுக்கு சிவப்பு எச்சரிக்கை!

உள்ளூர்August 6, 2026 · 1 week முன்3
மாத்தறை முதல் பொத்துவில் வரை மீனவர்களுக்கு சிவப்பு எச்சரிக்கை!

மாத்தறையிலிருந்து ஹம்பாந்தோட்டை ஊடாக பொத்துவில் வரையான கடற்பரப்புகளில் காற்றின் வேகம் மணித்தியாலத்திற்கு 60 முதல் 70 கிலோமீற்றர் வரை அதிகரிக்கக்கூடும் என்பதால், அடுத்த 24 மணித்தியாலங்களுக்கு வளிமண்டலவியல் திணைக்களம் சிவப்பு எச்சரிக்கையை விடுத்துள்ளது. இக்கடற்பரப்புகள் மிகவும் கொந்தளிப்பாகக் காணப்படும் என்பதால், மறு அறிவித்தல் வரை மீனவர்கள் அங்கு செல்வதைத் தவிர்க்குமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளனர். மேலும், மட்டக்களப்பில் இருந்து காங்கேசன்துறை, புத்தளம் மற்றும் கொழும்பு ஊடாக மாத்தறை வரையான பிற கடற்பரப்புகளிலும் காற்றின் வேகம் 50 – 60 கிலோமீற்றர் வரை அதிகரிக்கக்கூடும் என்பதால், கடல்சார் நடவடிக்கைகளில் ஈடுபடுவோர் மிகுந்த அவதானத்துடன் செயற்படுமாறு கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளனர்.