2026 August 16, Sunday 🌧️ கொழும்பு 27° ⛅ யாழ்ப்பாணம் 28° ⛅ கண்டி 22° ⛅ மட்டக்களப்பு 28°
LIVE
கரைதுறைப்பற்று பிரதேச சபை உப தவிசாளர் உட்பட ஐவர் கைது!நிதி முறைகேடுகள் தொடர்பான தகவல்களை வழங்குமாறு பயனாளிகளுக்கு கோரிக்கை!யாழ்ப்பாண மாவட்ட இராணுவ கட்டளைத் தளபதியால் புதிய வீடு கையளிப்பு!நாடு முழுவதும் 96 பகுதிகள் அதிஅபாய டெங்கு வலயங்களாக அடையாளம்!அவுஸ்திரேலியாவை 9 விக்கெட்டுகளால் வீழ்த்தி பங்களாதேஷ் வரலாற்று வெற்றி!நாட்டின் பெரிய வெங்காயத் தேவையில் 50% உள்நாட்டில் உற்பத்தி செய்ய திட்டம்!கடுவெல வழியாக பயணிப்போருக்கு பொலிஸாரின் முக்கிய அறிவிப்பு!28 ஆண்டுகால சாதனையை முறியடித்த ஜேர்மனியின் ஜூலியன் வெபர்!

நீதிபதிகள் ஓய்வுவயது விவகாரம் – சட்டத்தரணிகள் இன்று கூடினர்

உள்ளூர்July 29, 2026 · 3 weeks முன்3
நீதிபதிகள் ஓய்வுவயது விவகாரம் – சட்டத்தரணிகள் இன்று கூடினர்

இலங்கை சட்டத்தரணிகள் சங்கத்தின் விசேட பொதுச் சபை கூட்டம் தற்போது இலங்கை சட்டத்தரணிகள் சங்க வளாகத்தில் ஆரம்பமாகியுள்ளது.

 நீதிபதிகளின் ஓய்வுபெறும் வயதை உயர்த்துவதற்கு அரசாங்கம் எடுத்து வரும் நடவடிக்கைகளுக்கு எதிராக மேற்கொள்ளப்பட வேண்டிய நடவடிக்கைகள் குறித்து இதன்போது கவனம் செலுத்தப்படவுள்ளது.

 இந்த பொதுச் சபை கூட்டத்தில் தேசிய மக்கள் சக்தியின் தலைமைக் குழு மற்றும் நிறைவேற்றுக் குழு உறுப்பினரான சிரேஷ்ட சட்டத்தரணி லால் விஜேநாயக்க, சட்டத்தரணி உதய கம்மன்பில, ஜனாதிபதி சட்டத்தரணி அலி சப்ரி உள்ளிட்ட பல சட்டத்தரணிகள் கலந்து கொண்டுள்ளனர்.