2026 October 17, Saturday ⛅ கொழும்பு 25° 🌧️ யாழ்ப்பாணம் 27° ⛅ கண்டி 22° ⛅ மட்டக்களப்பு 26°
LIVE
நாமல் இன்றும் நீதிமன்றில் ஆஜர் !சவாலுக்கு மத்தியிலும்பொருளாதார ஸ்த்திரம் இலங்கைக்கு ஐ.நா வாழ்த்து !ஈராக்கில் இருந்து முழுமையாக வௌியேறும் அமெரிக்க படைகள் !தேசிய போக்குவரத்து ஆணைக்குழுவின் முன்னாள் தலைவர் ரேணுக பெரேரா பிணையில் விடுதலை.கிரிஷ் வழக்கில் நாமல் ராஜபக்ஷ நான்காவது பிரதிவாதியாகப் பெயரிடப்பட்டுள்ளார்.ரூ.21 மில்லியன் நிதி மோசடி வழக்கிலிருந்து உதய கம்மன்பில விடுதலை.பேரனர்த்தங்களின்போதான பதிலளிப்பு மற்றும் மனிதாபிமான உதவிகளில் ஒத்துழைப்பை அதிகரிக்கத் திட்டம்.ஈரான் சரணடைந்தால் கச்சா எண்ணெய் விலை கடுமையாக வீழ்ச்சியடையும் – ட்ரம்ப்.

முந்தனையாறு குடிநீர் திட்டத்தை அரசு கைவிடவில்லை – அமைச்சர் சுசில் ரணசிங்க உறுதி!

உள்ளூர்July 23, 2026 · 3 months முன்2
முந்தனையாறு குடிநீர் திட்டத்தை அரசு கைவிடவில்லை – அமைச்சர் சுசில் ரணசிங்க உறுதி!

மட்டக்களப்பு மாவட்டத்துக்கு சுத்தமான குடிநீர் கிடைக்க வேண்டும் என்பதை தொடர்ச்சியாக வலியுறுத்துகிறேன்.இதில் சில தொழில்நுட்ப மற்றும் நடைமுறை சார் பிரச்சினைகள் இருப்பதை ஏற்றுக் கொள்கிறோம்.

மட்டக்களப்பு மாவட்டத்துக்கென்று திட்டமிடல் குழு ஒன்று அவசியம் தேவை .

திருகோணமலை மாவட்டத்தில் இருந்து மட்டக்களப்பு மாவட்டத்துக்கு திட்டமிடல் ( வரைபு) நடவடிக்கைகளை முன்னெடுக்க முடியாது.

மட்டக்களப்பு மாவட்டத்துக்கு என்று திட்டமிடல் ( வரைபு ) பிரிவு ஒன்றை நியமித்தால் அப்பகுதி ஊடாக சகல விடயங்களையும் இணைக்கலாம்.

நீர்விநியோக திட்டத்துக்கு உரிய திட்டங்களை செயற்படுத்த வேண்டும்.

இதற்கமைய 2017/2018 ஆம் ஆண்டு காலப்பகுதியில் பிரன்ச் அபிவிருத்தி முகவர் ஊடாக மட்டக்களப்பு மாவட்டத்தில் முந்தனையாறு கருத்திட்டம் அறிமுகப்படுத்தப்பட்டது.

இந்த கருத்திட்டம் 2020 ஆம் ஆண்டு பொருளாதார பாதிப்புக்கு பின்னர் மட்டுப்படுத்தப்பட்டது.ஆனால் கடந்த 18 மாதகாலமாக அந்த முகவர் நிறுவனம் கருத்திட்ட பணியை தொடர முன்வந்துள்ள நிலையில் இலங்கை அரசாங்கம் குறித்த ஒப்பந்தத்தை கைச்சாத்திட நடவடிக்கை எடுக்கப்படவில்லை.

இந்த முகவர் நிறுவனத்துடன் கருத்திட்ட ஒப்பந்தம் எப்போது கைச்சாத்திடப்படும் ?

அவ்வாறு கைச்சாத்திடப்பட்டால் மட்டக்களப்பு மாவட்டத்துக்கு குடிநீர் வழங்க முந்தனையாறு குடிநீர் திட்டத்தை முன்னிலைப்படுத்துவீர்களா ?

இதற்கு எழுந்து பதிலளித்த நீர்வழங்கல் அமைச்சர் சுசில் ரணசிங்க, முந்தனையாறு கருத்திட்டத்தை நாங்கள் கைவிடவில்லை.

குறித்த நிறுவனத்துடன் பேச்சுவார்த்தையை மேற்கொள்ள அவதானம் செலுத்தியுள்ளோம்.

இந்த கருத்திட்டம் மிகவும் முக்கியமானது.மட்டக்களப்பு மாவட்டத்துக்கான நீர் விநியோகத்துக்கு புதிய திட்டங்களை அமுல்படுத்தவுள்ளோம் என்றார்.