2026 October 17, Saturday 🌧️ கொழும்பு 27° ⛈️ யாழ்ப்பாணம் 28° 🌧️ கண்டி 24° ⛈️ மட்டக்களப்பு 26°
LIVE
நாமல் இன்றும் நீதிமன்றில் ஆஜர் !சவாலுக்கு மத்தியிலும்பொருளாதார ஸ்த்திரம் இலங்கைக்கு ஐ.நா வாழ்த்து !ஈராக்கில் இருந்து முழுமையாக வௌியேறும் அமெரிக்க படைகள் !தேசிய போக்குவரத்து ஆணைக்குழுவின் முன்னாள் தலைவர் ரேணுக பெரேரா பிணையில் விடுதலை.கிரிஷ் வழக்கில் நாமல் ராஜபக்ஷ நான்காவது பிரதிவாதியாகப் பெயரிடப்பட்டுள்ளார்.ரூ.21 மில்லியன் நிதி மோசடி வழக்கிலிருந்து உதய கம்மன்பில விடுதலை.பேரனர்த்தங்களின்போதான பதிலளிப்பு மற்றும் மனிதாபிமான உதவிகளில் ஒத்துழைப்பை அதிகரிக்கத் திட்டம்.ஈரான் சரணடைந்தால் கச்சா எண்ணெய் விலை கடுமையாக வீழ்ச்சியடையும் – ட்ரம்ப்.

காளான் வளர்ப்பை ஊக்குவிக்க புதிய காப்புறுதி திட்டம் நடைமுறை!

உள்ளூர்July 15, 2026 · 3 months முன்4
காளான் வளர்ப்பை ஊக்குவிக்க புதிய காப்புறுதி திட்டம் நடைமுறை!

காளான் வளர்ப்பிற்காகப் புதிய காப்புறுதித் திட்டமொன்றை அறிமுகப்படுத்துவதற்கு விவசாய, கால்நடை, காணி மற்றும் நீர்ப்பாசன அமைச்சின் கீழ் இயங்கும் விவசாய மற்றும் விவசாய காப்புறுதிச் சபை திட்டமிட்டுள்ளது.

 இந்த காப்புறுதித் திட்டத்தின் கீழ், 250 காளான் வளர்ப்பு பைகளைக் கொண்ட காளான் வளர்ப்பு கூடம் ஒன்றினை மூன்று மாத காலத்திற்கு காப்புறுதி செய்வதற்கான தவணைக்கட்டணம் சுமார் 2,025 ரூபாயாகும்.

 அத்துடன், நோய்கள் அல்லது பூச்சித் தாக்கங்கள் காரணமாக காளான் வளர்ப்பிற்கு சேதம் ஏற்பட்டால், 22,500 ரூபாய் காப்புறுதி இழப்பீட்டை வழங்குவதற்கும் இத்திட்டத்தின் கீழ் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

 விவசாயத் திணைக்களத்தின் பரிந்துரைகளுக்கு அமைவாக காளான் வளர்ப்பில் ஈடுபடும் விவசாயிகள் இக்காப்புறுதிப் பாதுகாப்பினைப் பெற்றுக்கொள்ள முடியும் என்பதுடன், பயிர்களுக்கு ஏற்படக்கூடிய எதிர்பாராத நட்டங்களிலிருந்து பாதுகாப்பை வழங்குவதே இதன் முக்கிய நோக்கமாகும்.

 காளான் வளர்ப்பை ஊக்குவித்து பிரபலப்படுத்தும் நோக்கில், விவசாய மற்றும் விவசாய காப்புறுதிச் சபையினால் இத்திட்டம் நடைமுறைப்படுத்தப்படுகின்றது.