2026 October 17, Saturday 🌧️ கொழும்பு 29° 🌧️ கண்டி 28° 🌧️ மட்டக்களப்பு 30°
LIVE
நாமல் இன்றும் நீதிமன்றில் ஆஜர் !சவாலுக்கு மத்தியிலும்பொருளாதார ஸ்த்திரம் இலங்கைக்கு ஐ.நா வாழ்த்து !ஈராக்கில் இருந்து முழுமையாக வௌியேறும் அமெரிக்க படைகள் !தேசிய போக்குவரத்து ஆணைக்குழுவின் முன்னாள் தலைவர் ரேணுக பெரேரா பிணையில் விடுதலை.கிரிஷ் வழக்கில் நாமல் ராஜபக்ஷ நான்காவது பிரதிவாதியாகப் பெயரிடப்பட்டுள்ளார்.ரூ.21 மில்லியன் நிதி மோசடி வழக்கிலிருந்து உதய கம்மன்பில விடுதலை.பேரனர்த்தங்களின்போதான பதிலளிப்பு மற்றும் மனிதாபிமான உதவிகளில் ஒத்துழைப்பை அதிகரிக்கத் திட்டம்.ஈரான் சரணடைந்தால் கச்சா எண்ணெய் விலை கடுமையாக வீழ்ச்சியடையும் – ட்ரம்ப்.

விளையாட்டு அரங்கில் புதிய போட்டி பரபரப்பு – கரப்பந்தாட்ட தொடர் விரைவில்.

உள்ளூர்July 14, 2026 · 3 months முன்3
விளையாட்டு அரங்கில் புதிய போட்டி பரபரப்பு – கரப்பந்தாட்ட தொடர் விரைவில்.

ஜனாதிபதி தங்கக் கிண்ண கரப்பந்தாட்ட தொடரை எதிர்வரும் செப்டம்பர் மாதம் 5 ஆம் திகதி முதல் ஆரம்பிப்பதற்கு இலங்கை கரப்பந்தாட்ட சம்மேளனம் திட்டமிட்டுள்ளது. 

இப்போட்டித் தொடருக்கான விண்ணப்பங்களை சமர்ப்பிக்கும் காலம் எதிர்வரும் ஓகஸ்ட் மாதம் 15 ஆம் திகதியுடன் நிறைவடையும் என அந்தச் சம்மேளனம் அறிவித்துள்ளது. 

மாவட்ட மட்டத்தில் ஆரம்பமாகும் இப்போட்டித் தொடரில், மாவட்ட போட்டிகளில் வெற்றிபெறும் தலா 25 அணிகள் தேசிய மட்டப் போட்டிகளுக்கு தகுதி பெறவுள்ளன. 

கடந்த ஆண்டு நடைபெற்ற ஜனாதிபதி தங்கக் கிண்ண கரப்பந்தாட்ட தொடரின் ஆடவர் பிரிவில் தெஹியோவிட்ட ரன்தரு விளையாட்டுக் கழகமும், மகளிர் பிரிவில் மஹாஉஸ்ஸேவ ரதனபால விளையாட்டுக் கழகமும் செம்பியன் பட்டங்களை வென்றிருந்தமை குறிப்பிடத்தக்கது.