2026 October 15, Thursday ⛅ கொழும்பு 25° 🌧️ யாழ்ப்பாணம் 27° ⛅ கண்டி 22° ⛅ மட்டக்களப்பு 26°
LIVE
நாமல் இன்றும் நீதிமன்றில் ஆஜர் !சவாலுக்கு மத்தியிலும்பொருளாதார ஸ்த்திரம் இலங்கைக்கு ஐ.நா வாழ்த்து !ஈராக்கில் இருந்து முழுமையாக வௌியேறும் அமெரிக்க படைகள் !தேசிய போக்குவரத்து ஆணைக்குழுவின் முன்னாள் தலைவர் ரேணுக பெரேரா பிணையில் விடுதலை.கிரிஷ் வழக்கில் நாமல் ராஜபக்ஷ நான்காவது பிரதிவாதியாகப் பெயரிடப்பட்டுள்ளார்.ரூ.21 மில்லியன் நிதி மோசடி வழக்கிலிருந்து உதய கம்மன்பில விடுதலை.பேரனர்த்தங்களின்போதான பதிலளிப்பு மற்றும் மனிதாபிமான உதவிகளில் ஒத்துழைப்பை அதிகரிக்கத் திட்டம்.ஈரான் சரணடைந்தால் கச்சா எண்ணெய் விலை கடுமையாக வீழ்ச்சியடையும் – ட்ரம்ப்.

இலங்கை சுற்றுலாத்துறைக்கு புதிய உற்சாகம்!

உள்ளூர்July 10, 2026 · 3 months முன்4
இலங்கை சுற்றுலாத்துறைக்கு புதிய உற்சாகம்!

2026 ஆம் ஆண்டில் இதுவரையான காலப்பகுதியில் இலங்கைக்கு வருகை தந்துள்ள ஒட்டுமொத்த சுற்றுலாப் பயணிகளின் எண்ணிக்கை 12 இலட்சத்தை நெருங்கியுள்ளதாக சுற்றுலாத்துறை பிரதி அமைச்சர் ருவன் ரணசிங்க தெரிவித்துள்ளார்.

 கொழும்பில் நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துகொண்டு கருத்துத் தெரிவித்தபோதே பிரதி அமைச்சர் இதனைப் பகிர்ந்து கொண்டார்.

 இந்த ஆண்டின் இதுவரையான காலப்பகுதியில், சுற்றுலாப் பயணிகளின் வருகை மூலம் 1.5 பில்லியன் அமெரிக்க டொலருக்கும் அதிகமான வெளிநாட்டுச் செலாவணி வருமானத்தை இலங்கையினால் ஈட்ட முடிந்துள்ளதாக அவர் மேலும் சுட்டிக்காட்டினார்.

 இலங்கையின் சுற்றுலாத்துறையில் ஏற்பட்டுள்ள இந்த சாதகமான வளர்ச்சியை அடுத்து, 2026 ஆம் ஆண்டிற்காக எதிர்பார்க்கப்படும் 2.5 மில்லியன் சுற்றுலாப் பயணிகளின் வருகை என்ற இலக்கை வெற்றிகரமாக அடைய முடியும் என்றும் இணை அமைச்சர் ருவன் ரணசிங்க தெரிவித்தார்.