2026 October 14, Wednesday 🌧️ யாழ்ப்பாணம் 26° 🌧️ கண்டி 23° 🌧️ மட்டக்களப்பு 27°
LIVE
நாமல் இன்றும் நீதிமன்றில் ஆஜர் !சவாலுக்கு மத்தியிலும்பொருளாதார ஸ்த்திரம் இலங்கைக்கு ஐ.நா வாழ்த்து !ஈராக்கில் இருந்து முழுமையாக வௌியேறும் அமெரிக்க படைகள் !தேசிய போக்குவரத்து ஆணைக்குழுவின் முன்னாள் தலைவர் ரேணுக பெரேரா பிணையில் விடுதலை.கிரிஷ் வழக்கில் நாமல் ராஜபக்ஷ நான்காவது பிரதிவாதியாகப் பெயரிடப்பட்டுள்ளார்.ரூ.21 மில்லியன் நிதி மோசடி வழக்கிலிருந்து உதய கம்மன்பில விடுதலை.பேரனர்த்தங்களின்போதான பதிலளிப்பு மற்றும் மனிதாபிமான உதவிகளில் ஒத்துழைப்பை அதிகரிக்கத் திட்டம்.ஈரான் சரணடைந்தால் கச்சா எண்ணெய் விலை கடுமையாக வீழ்ச்சியடையும் – ட்ரம்ப்.

டெங்கு அபாயத்தில் மொறட்டுவை பல்கலைக்கழகம்.

உள்ளூர்July 7, 2026 · 3 months முன்4
டெங்கு அபாயத்தில் மொறட்டுவை பல்கலைக்கழகம்.

டெங்கு அபாயம் காரணமாக மொறட்டுவை பல்கலைக்கழகம் தற்காலிகமாக மூடப்பட்டுள்ளது.

 நேற்று (06) முதல் இரண்டு வார காலத்திற்கு பல்கலைக்கழகத்தை மூடுவதற்கு நிர்வாகம் நடவடிக்கை எடுத்துள்ளது.

 தற்போது பல்கலைக்கழகத்தில் பரீட்சைகள் நடைபெற்று வரும் நிலையில், காய்ச்சலால் பாதிக்கப்பட்ட சில மாணவர்கள் அந்தப் பரீட்சைகளில் கலந்துகொண்டதாகத் தெரிவிக்கப்படுகிறது.

 இதன் காரணமாகவே பல்கலைக்கழகத்தைத் தற்காலிகமாக மூடுவதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

 இருப்பினும், மாணவர்களுக்கான விரிவுரைகள் இணையவழியில் தொடர்ந்தும் நடைபெறும் எனப் பல்கலைக்கழக நிர்வாகம் தெரிவித்துள்ளது.

 இதன்படி, நேற்று முதல் இரண்டு வாரங்களுக்கு மூடப்பட்ட மொறட்டுவை பல்கலைக்கழகத்தின் கல்வி நடவடிக்கைகள் எதிர்வரும் 21 ஆம் திகதி மீண்டும் ஆரம்பிக்கப்படவுள்ளன.