2026 October 11, Sunday ⛅ கொழும்பு 28° ⛅ யாழ்ப்பாணம் 32° ⛅ கண்டி 27° ⛅ மட்டக்களப்பு 29°
LIVE
நாமல் இன்றும் நீதிமன்றில் ஆஜர் !சவாலுக்கு மத்தியிலும்பொருளாதார ஸ்த்திரம் இலங்கைக்கு ஐ.நா வாழ்த்து !ஈராக்கில் இருந்து முழுமையாக வௌியேறும் அமெரிக்க படைகள் !தேசிய போக்குவரத்து ஆணைக்குழுவின் முன்னாள் தலைவர் ரேணுக பெரேரா பிணையில் விடுதலை.கிரிஷ் வழக்கில் நாமல் ராஜபக்ஷ நான்காவது பிரதிவாதியாகப் பெயரிடப்பட்டுள்ளார்.ரூ.21 மில்லியன் நிதி மோசடி வழக்கிலிருந்து உதய கம்மன்பில விடுதலை.பேரனர்த்தங்களின்போதான பதிலளிப்பு மற்றும் மனிதாபிமான உதவிகளில் ஒத்துழைப்பை அதிகரிக்கத் திட்டம்.ஈரான் சரணடைந்தால் கச்சா எண்ணெய் விலை கடுமையாக வீழ்ச்சியடையும் – ட்ரம்ப்.

பேராதெனிய நோக்கி மாற்றப்பட்ட தொடருந்து பெட்டிகள் – அடுத்த கட்ட பணிகள் ஆரம்பம்!

உள்ளூர்July 4, 2026 · 3 months முன்7
பேராதெனிய நோக்கி மாற்றப்பட்ட தொடருந்து பெட்டிகள் – அடுத்த கட்ட பணிகள் ஆரம்பம்!

டித்வா புயலால் கடுமையாகச் சேதமடைந்த கடுங்கன்னாவா – ரம்புக்கனை இடையிலான கண்டி–கொழும்பு பிரதான தொடருந்து பாதையைச் சீரமைக்கும் பணிகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளன.

தொடருந்து பாதை சேதமடைந்து போக்குவரத்து தடைப்பட்டதால், தகவல் தொடர்பு சாதனங்கள் மற்றும் கட்டுமானப் பொருட்கள் அடங்கிய இரண்டு தொடருந்து பெட்டிகள் தண்டவாளத்தில் இருந்து அகற்றப்பட்டு, கண்டியிலிருந்து பேராதெனிய தொடருந்து நிலையத்திற்குச் சாலை மார்க்கமாகக் கொண்டு செல்லப்பட்டுள்ளன.

இந்த தொடருந்து பெட்டிகளை நகர்த்துவதற்காக இலங்கையிலேயே தயாரிக்கப்பட்ட கனரக போக்குவரத்து பயன்படுத்தப்பட்டமை குறிப்பிடத்தக்க அம்சமாகும்.

இரு பெட்டிகளும் பேராதெனியவிற்கு வெற்றிகரமாகக் கொண்டுவரப்பட்டுள்ள நிலையில், அதே கனரக வாகனத்தைப் பயன்படுத்தி தொடர்வண்டியையும் பேராதெனிய தொடருந்து நிலையத்திற்குக் கொண்டு வருவதற்கான ஏற்பாடுகள் செய்யப்படுகின்றன.