2026 August 17, Monday 🌧️ கொழும்பு 27° ☀️ யாழ்ப்பாணம் 28° ⛅ கண்டி 23° ⛅ மட்டக்களப்பு 28°
LIVE
ஹிருணிகா உள்ளிட்ட பிரதிவாதிகளின் வழக்கில் நீதிமன்றத்தின் புதிய உத்தரவு!நுவரெலியா கிரகரி வாவியில் பரபரப்பு – இரண்டு சிறுவர்கள் மீட்பு!பாடப்புத்தக விநியோகத்தில் என்ன நடந்தது? விசாரணையில் வெளியாகும் தகவல்கள்ஆகஸ்ட் 21 முதல் 23 வரை ஹப்புத்தாலையில் பிரமாண்ட உணவுத் திருவிழா!பேராசிரியர் ரவீந்திரநாத் கடத்தல் மற்றும் கொலை வழக்கில் முக்கிய திருப்பம்!யாழ்ப்பாணத்தில் உருவாகிறது வட இலங்கையின் மிக உயரமான கட்டிடம்!இலங்கையில் முதல்முறை வங்கிகளுக்குள்ளேயே முகாமையாளர்கள் கைது!ரூ.770 கோடி மதிப்புள்ள அபூர்வ ஓவியங்கள் திருட்டு!

புதிய டெங்கு வைரஸ் பரவல்! பிரதமர் ஹரினி அமரசூரிய வெளியிட்ட அதிர்ச்சி தகவல்

உள்ளூர்June 27, 2026 · 2 months முன்2
புதிய டெங்கு வைரஸ் பரவல்! பிரதமர் ஹரினி அமரசூரிய வெளியிட்ட அதிர்ச்சி தகவல்

டெங்கு நோயாளர்களின் எண்ணிக்கை அதிகரித்திருப்பது ஒரு புதிய டெங்கு வைரஸ் காரணமாகவே என்று பிரதமர் கலாநிதி ஹரினி அமரசூரிய தெரிவித்துள்ளார்.

“புதிய வைரஸ் தொற்றுடன் நோய் பரவல் அதிகரித்த போதிலும், நாங்கள் ஒரு விசேட செயல்பாட்டை மேற்கொண்டோம். தற்போது அதன் தாக்கம் சற்றே குறைந்துள்ளது. கொழும்பு மாவட்டத்திலேயே டெங்கு அச்சுறுத்தல் அதிகமாகக் காணப்படுகிறது. மஹரகம மற்றும் கொழும்பு நகரை ஒட்டிய பகுதிகளில் இதன் பரவல் அதிகமாக உள்ளது. வீடுகளை விடவும், பொது இடங்கள், குறிப்பாகப் பாடசாலைகள், அலுவலக வளாகங்கள் மற்றும் பாழடைந்த வெற்று நிலங்களில் இந்நிலைமை கண்டறியப்பட்டுள்ளது. ஆனால், அந்த வெற்று நிலங்களில் ஏதேனும் நடவடிக்கை எடுக்கச் செல்லும்போது அதன் உரிமையாளர்கள் வருகிறார்கள். கட்டுமானப் பணிகள் ஆரம்பிக்கப்பட்டு, பின்னர் பாதியில் நிறுத்தப்பட்டுள்ள இடங்களிலும் டெங்கு பரவக்கூடிய சூழல் அடையாளம் காணப்பட்டுள்ளது.”

தற்போதைய சூழ்நிலையைக் கருத்திற்கொண்டு, இன்றைய தினமும் (27) நாட்டின் பல பகுதிகளில் டெங்கு ஒழிப்பு நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டு வருவதுடன், சில அரச நிறுவன வளாகங்களிலும் நுளம்புகள் பெருகும் இடங்கள் கண்டறியப்பட்டுள்ளன.