2026 August 17, Monday 🌧️ கொழும்பு 26° ⛅ யாழ்ப்பாணம் 28° ⛅ கண்டி 22° ⛅ மட்டக்களப்பு 28°
LIVE
கரைதுறைப்பற்று பிரதேச சபை உப தவிசாளர் உட்பட ஐவர் கைது!நிதி முறைகேடுகள் தொடர்பான தகவல்களை வழங்குமாறு பயனாளிகளுக்கு கோரிக்கை!யாழ்ப்பாண மாவட்ட இராணுவ கட்டளைத் தளபதியால் புதிய வீடு கையளிப்பு!நாடு முழுவதும் 96 பகுதிகள் அதிஅபாய டெங்கு வலயங்களாக அடையாளம்!அவுஸ்திரேலியாவை 9 விக்கெட்டுகளால் வீழ்த்தி பங்களாதேஷ் வரலாற்று வெற்றி!நாட்டின் பெரிய வெங்காயத் தேவையில் 50% உள்நாட்டில் உற்பத்தி செய்ய திட்டம்!கடுவெல வழியாக பயணிப்போருக்கு பொலிஸாரின் முக்கிய அறிவிப்பு!28 ஆண்டுகால சாதனையை முறியடித்த ஜேர்மனியின் ஜூலியன் வெபர்!

நெல் கொள்முதல் தீவிரம் – 40,000 மெட்ரிக் தொன் வரை உயர்வு.

உள்ளூர்September 6, 2025 · 11 months முன்0
நெல் கொள்முதல் தீவிரம் – 40,000 மெட்ரிக் தொன் வரை உயர்வு.

அரசின் நெல் கொள்முதல் திட்டத்தின் கீழ் 40,000 மெட்ரிக் தொன்னுக்கும் அதிகமான நெல் கொள்முதல் செய்யப்பட்டுள்ளதாக நெல் சந்தைப்படுத்தல் சபை தெரிவித்துள்ளது.

அம்பாறை மாவட்டத்தில் அறுவடையில் 85 சதவீதம் தற்போது நிறைவடைந்துள்ள நிலையில், அம்பாறை மாவட்டத்தில் இருந்து அதிக அளவு நெல் கொள்முதல் செய்யப்பட்டுள்ளதாக நெல் சந்தைப்படுத்தல் சபையின் தலைவர் மஞ்சுள பின்னலந்த தெரிவித்தார்.

அநுராதபுரம் மற்றும் பொலன்னறுவை மாவட்டங்களிலும் நெல் கொள்முதல் நடைபெற்று வருவதாக அவர் கூறினார்.

மேலும், அரசாங்கம் 55,000 மில்லியன் ரூபா விவசாயிகளுக்கு செலுத்தப்பட்டுள்ளதாகவும், நெல் கொள்முதல் செய்வதற்காக முதல் கட்டமாக 60,000 மில்லியன் ரூபாவை ஒதுக்கியுள்ளதாகவும் நெல் சந்தைப்படுத்தல் சபையின் தலைவர் மஞ்சுள பின்னலந்த மேலும் தெரிவித்துள்ளார்.