2026 August 15, Saturday 🌧️ கொழும்பு 29° ⛅ யாழ்ப்பாணம் 30° 🌧️ கண்டி 26° 🌧️ மட்டக்களப்பு 31°
LIVE
அம்பாறை மீனவர்களின் பிரச்சினைகளுக்கு விரைவான தீர்வு!ஜனாதிபதியுடனான கலந்துரையாடலின் முழு வீடியோவை கோரும் சட்டத்தரணிகள் சங்கம்!சிறைச்சாலை அதிகாரிகளுக்கு ஆபத்தை ஏற்படுத்த திட்டமா? அதிர்ச்சித் தகவல்!திருகோணமலையில் திறமையான மாணவர்களுக்கு கல்வி உதவித்தொகை!இந்தியாவுக்குச் சொந்தமானதா? இரணைவில கடற்கரையில் மர்ம படகு!Google Maps-ல் புதிய AI வழிகாட்டி – பயணம் இனி இன்னும் எளிது!தினசரி உடற்பயிற்சி – ஆரோக்கியமான நீண்ட ஆயுளுக்கு முதல் படி!சருமம் முதல் கூந்தல் வரை – ஓமம் தண்ணீரின் அழகு ரகசியங்கள்!

ஈஸ்டர் தாக்குதல் விசாரணை: அமெரிக்க அறிக்கை கோரப்பட்டதா? – UNP கேள்வி!

உள்ளூர்June 18, 2026 · 2 months முன்1
ஈஸ்டர் தாக்குதல் விசாரணை: அமெரிக்க அறிக்கை கோரப்பட்டதா? – UNP கேள்வி!

உயிர்த்த ஞாயிறு தாக்குதல் தொடர்பான விசாரணைகள் மீண்டும் தீவிரமடைந்துள்ள நிலையில், ஐக்கிய தேசியக் கட்சி இது குறித்து விசேட அறிக்கையொன்றை வெளியிட்டுள்ளது.

தாக்குதல் தொடர்பாக அமெரிக்க புலனாய்வு அமைப்புகள் மேற்கொண்ட விசாரணைகளின் முழுமையான தகவல்களை தற்போதைய அரசாங்கம் உத்தியோகபூர்வமாக பெற்றுள்ளதா என அந்தக் கட்சி கேள்வி எழுப்பியுள்ளது.

2019 ஆம் ஆண்டு தாக்குதலுக்குப் பின்னர், அப்போதைய பிரதமர் ரணில் விக்ரமசிங்க அமெரிக்காவின் உதவியை நாடியிருந்ததாகவும், தொழில்நுட்ப மற்றும் புலனாய்வு ஆதரவுடன் உண்மைகளை கண்டறியும் முயற்சிகள் முன்னெடுக்கப்பட்டதாகவும் அறிக்கையில் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.

ஈஸ்டர் தாக்குதலின் முழுமையான உண்மைகள் வெளிப்பட வேண்டுமெனில், சர்வதேச விசாரணைத் தகவல்களும் முழுமையாக பயன்படுத்தப்பட வேண்டும் என ஐக்கிய தேசியக் கட்சி வலியுறுத்தியுள்ளது.